2000, 1500னு காதில் பூ சுத்திய படக்குழு.. கங்குவாவில் மொத்தம் ஆடியதே இத்தனை பேருதான்

Kanguva: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட மொழியில் இப்படம் உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் 3டி அனிமேஷனில் கங்குவா படம் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் லியோ படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான நா ரெடி பாடலில் கிட்டத்தட்ட 2000 நடன கலைஞர்கள் பங்கு பெற்றதாக கூறியிருந்தனர். அதேபோல் கங்குவா படத்தில் ஓப்பனிங் பாடல் ஒன்று இவிபி செட்டில் எடுக்கப்பட்டது. இதில் 1500 நடன கலைஞர்கள் பங்கு பெற்றதாக கூறப்பட்டது.

இவ்வாறு விஜய் மற்றும் சூர்யா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு படங்களில் அதிக நடன கலைஞர்கள் வைத்து பாடல்கள் எடுக்கப்பட்டதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் நிஜத்தில் விசாரித்துப் பார்த்தால் 2000,1500 என காதில் பூ சுத்தும் வேலையாகத்தான் இருக்கிறது.

அதாவது லியோ மற்றும் கங்குவா இரண்டு படங்களிலுமே வெறும் 200 நடன கலைஞர்கள் வைத்து தான் இந்த பாடல்களை எடுத்துள்ளார்களாம். ஆனால் கங்குவா படத்தில் இடம்பெற்ற பாடலில் ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது. அதாவது ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் நாட் நாட் பாட்டுக்கு கோரியோகிராப் செய்தவர் பிரேம் ரக்ஷித்.

ஆஸ்கர் விருது வாங்கிய இவரும் இயக்குனர் சிறுத்தை சிவாவும் நெருங்கிய நண்பர்களாம். ஆகையால் சிறுத்தை சிவா கேட்டுக் கொண்டதனால் கங்குவா படத்தில் இடம்பெற்ற ஓபனிங் சாங்கை பிரேம் ரக்ஷித் செய்து கொடுத்துள்ளார். இந்த பாடல் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இந்நிலையில் கங்குவா படக்குழு மீண்டும் கொடைக்கானல் சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். அங்கு இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருக்கிறதாம். மேலும் சூர்யா மிக விரைவில் இந்த படத்தை முடித்த கையோடு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இணைய இருக்கிறார்.