Actor Vijay-Ajith: தற்போது சோசியல் மீடியா முழுவதும் அஜித் பற்றிய பேச்சு தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலை கேட்டதும் பதறி துடித்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என தொடர் கேள்விகளை எழுப்பி வந்தனர்.
அதைத்தொடர்ந்து வழக்கமான பரிசோதனை தான் என்ற செய்திகள் கசிந்தது. ஆனால் திடீரென இன்று அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் ஒரு தகவல் தீயாக பரவியது. இதைக் கேட்ட ரசிகர்கள் அவர் விரைவில் குணம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.
ஆனால் அது பொய்யான தகவல் என்றும் காது பகுதியில் நரம்பு வீக்கம் காரணமாக அவருக்கு சிகிச்சை நடைபெற்றதாகவும் அஜித்தின் மேனேஜர் தெரிவித்திருந்தார். மேலும் அரை மணி நேரத்தில் சிகிச்சை முடிந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார் என்ற தகவலையும் வெளியிட்டு இருந்தார்.
அதன் பிறகு தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் விஜய் தன் நண்பனை பார்க்க மருத்துவமனைக்கு செல்ல இருக்கிறாராம். அஜித் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் தான் இருப்பார். விஜய்யும் தற்போது சென்னையில் தான் இருக்கிறார்.
அதன் காரணமாகவே இந்த சந்திப்பு நிகழ இருக்கிறது. ஏற்கனவே அஜித்தின் அப்பா இறந்த போது கூட முதல் ஆளாக ஓடி வந்தது விஜய் தான் அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் தற்போது அரசியல் கட்சி தலைவராக இருக்கும் விஜய் இதை வைத்து ஒரு பெரிய பிளானையும் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது அவர் அஜித்தை சந்திப்பதன் மூலம் அவருடைய ரசிகர்களையும் தன் பக்கம் இழுக்கலாம் என கணக்குப் போட்டு இருக்கிறார். இதுதான் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது. அந்த வகையில் விஜய் அஜித்தை பார்க்க செல்வதற்கு பின்னணியில் இப்படி ஒரு காரணமும் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.