மே 2024ல் வந்திருக்க வேண்டிய விடாமுயற்சி.. தாமதம் ஏன்.? மனம் திறந்த மகிழ் திருமேனி

Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி பிப்ரவரி ஆறாம் தேதி திரைக்கு வருகிறது. அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கம் தான் இந்த படம்.

பல வருடங்களாக சூட்டிங் ஆரம்பிப்பதும் பிரேக் விடுவதுமாக ரசிகர்களை ரொம்பவே சோதித்தது இந்த விடாமுயற்சி. இறுதியில் பொங்கலுக்கு வரும் என அறிவிப்பு வந்தது.

ஆனால் அதுவும் தள்ளிப்போன நிலையில் தற்போது பிப்ரவரி 6 குறி வைத்திருக்கிறது பட குழு. அதற்கான ப்ரொமோஷனில் இயக்குனர் பிஸியாக இருக்கிறார்.

படம் குறித்த பல சந்தேகங்களுக்கும் அவர் தற்போது பதில் அளித்து வருகிறார். அதில் அவர் கூறிய ஒரு விஷயம் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

விடாமுயற்சி தாமதம் ஏன்.?

அதாவது இப்படம் போன வருஷம் ஏப்ரல் அல்லது மே மாதத்திலேயே வந்திருக்க வேண்டியது. ஆனால் படப்பிடிப்பு நடந்த அஜர்பைஜானில் சூழ்நிலை அவ்வளவு ஏற்றதாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச மழை, பனிப்பொழிவு கடந்த வருடம் இருந்தது. அதேபோல் காற்றும் ஆளையே தூக்கும் அளவுக்கு அதிவேகத்தில் இருந்தது.

அதனால்தான் குறுகிய காலத்தில் எடுத்து முடித்திருக்க வேண்டிய இப்படம் தாமதமானது. இவ்வளவு கஷ்டங்களையும் எதிர்கொண்டு கடந்து தற்போது படம் வெளிவர போகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment