விஜய்யை பார்த்து மிரண்ட வாரிசு படக்குழு.. தளபதி எச்சரித்ததன் காரணம் இதுதான்

தளபதி விஜய் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் நடித்த வருகிறார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் வாரிசு படம் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்த சூழலில் தளபதியாய் என்று தயாரிப்பாளர், இயக்குனர், படக்குழுவில் உள்ள அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு கோபப்பட்டு உள்ளார் விஜய். சமீபகாலமாக வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படக்குழுவிற்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் ஒரு பாடல் காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது அடிக்கடி வாரிசு படத்திலிருந்து கிளிப்ஸ் வெளியாவதால் விஜய் கோபப்பட்டு கண்டிப்பாக நடந்து கொண்டுள்ளார். இதனால் மெத்தனமாய் வேலை பார்த்த ஜிம் பாய்ஸ் யூனிடை விஜய் மாற்றி உள்ளார்.

மேலும் யாரும் ஷூட்டிங் பார்ப்பதற்கு அனுமதி கிடையாதாம். படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் குரூப் டான்சர், ஜிம் பாய்ஸ், யூனிட் ஆஃபீஸ் வேலை செய்பவர்களை தவிர யாரும் அங்கு இருக்கக்கூடாது என விஜய் திட்டவட்டமாக மறுத்துள்ளாராம். ஏனென்றால் சாதாரணமாகவே விஜய் சூப்பராக டான்ஸ் ஆட கூடியவர்.

தற்போது வாரிசு படத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை நிமிஷம் நான் ஸ்டாப்பாக தளபதி ஆடி உள்ளாராம். இந்த நடனம் பீஸ்ட் படத்தில் விஜய் ஆடிய அரபி குத்து பாடலை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுமாம். இதுவும் இணையத்தில் வெளியாக கூடாது என மிகவும் கவனமாக இருந்துள்ளார் விஜய்.

மேலும் தளபதி எடுத்துள்ள இந்த முடிவால் இனிமேல் வாரிசு படத்தில் இருந்து எந்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகாது என கூறப்படுகிறது. வாரிசு படத்தில் ஆறு பாடல்கள் உள்ள நிலையில் இதில் ஒரு பாடல் விஜய் பாடியுள்ளார். இப்படத்தை குறித்து அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது.