வைகைப் புயலையே சீரியஸ் ஆக்கிய காரணம் இதுதான்.. 10 வருட ரகசியத்தை உடைத்த மாரி செல்வராஜ்

நம் மனதில் சிறந்த காமெடியன் என்ற இடத்தை பிடித்த வடிவேலு தற்போது தன் இரண்டாவது இன்னிங்ஸில் அடி எடுத்து வைத்திருக்கிறார். அந்த வகையில் இவர் நடித்து வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று தந்தது.

இது ஒரு புறம் இருக்க தற்பொழுது இயக்குனர் ஆன மாரி செல்வராஜ் இவரின் 10 வருட ரகசியத்தை தெரிவித்து இருக்கிறார். நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலு இந்த பத்து வருடமாக சீரியஸாக இருந்ததாகவும் அதன் மூலம் தன்னை தயார் படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பார்க்கையில் வடிவேலுக்கு அந்த காலங்கள் சூனிய காலமாகவே அமைந்தது. அடுத்தடுத்து வந்த அரசியல் ரீதியான பிரச்சனை மற்றும் பட ரீதியான பிரச்சனைகளும் அவரை நிலைகுலைய செய்தது. மேலும் சினிமாவில் ரெட் கார்டு பெற்ற அவர் இருக்கும் இடம் தெரியாமல் போனார்.

தற்போது ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவர் அரசியல்வாதியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் மாதம் வெளிவர இருப்பதால் ஒரு எதிர்பார்ப்பையும் உண்டாக்கி வருகிறது.

ஏனென்றால் இப்படத்தில் அவருக்குரிய நகைச்சுவை உணர்வு இல்லாமல் சீரியஸான கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர். மேலும் படத்தின் போஸ்டரில் இவரின் கெட்டப்பும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இத்தகைய புது முயற்சியில் களம் இறங்கி உள்ளார் நம் வைகைப்புயல்.மேலும் இப்படத்தின் மூலம் அவருக்கு நேர்ந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. தன்னைத் தூற்றியவர்கள் வாயில் மண்ணை போடும் விதமாக இப்படம் அமையும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார் வடிவேலு.