பாக்ஸ் ஆபிஸ் கடவுளே இவர் தான் என்று சொல்லும் அளவுக்கு விஜய்யின் கொடி தான் உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. அதனாலேயே இவரை வைத்து படம் எடுப்பதற்கு நீ, நான் என பலரும் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் லியோ படம் சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க கடந்த சில நாட்களாகவே தளபதி 68 பற்றிய பேச்சு தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த படத்தில் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது.
அதைத்தொடர்ந்து இப்போது சோசியல் மீடியாவில் இந்த விவகாரம் தான் பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையில் விஜய்யின் மார்க்கெட் இப்போது அதிகரித்துள்ளது தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதாவது லியோ படத்தின் மூலம் இவரின் பிசினஸும் வேற லெவலுக்கு உயர்ந்துள்ளது.
எப்படி என்றால் தற்போது இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 400 கோடியை தாண்டி வியாபாரம் ஆகி இருக்கிறது. அதை தொடர்ந்து படம் வெளியான பிறகு கலெக்சனிலும் மிகப்பெரிய உச்சத்தை தொடும் என இப்போதே கருத்து கணிப்புகளும் வெளியாகி வருகிறது. இதனாலேயே விஜய்யின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்து வந்தது.
இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் அவர் தளபதி 68 படத்திற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திடம் 175 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். ஆனால் அவரையே ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு தயாரிப்பு தரப்பு 200 கோடி சம்பளம் தர முன் வந்திருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை அனைத்தும் சமூகமாக முடிந்த நிலையில் தான் பரபரப்பான அறிவிப்பையும் அவர்கள் வெளியிட்டு இருக்கின்றனர்.
இப்படி கேட்டதற்கு மேலேயே சம்பளத்தை தர ஒத்துக் கொண்ட தயாரிப்பு தரப்பு இதை வைத்து பல திட்டங்களையும் போட்டுள்ளது. அதாவது லியோ படத்தையே முந்தும் அளவுக்கு இந்த படத்தின் பிசினஸை நடத்தி காட்டி விட வேண்டும் என்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்களாம். அந்த வகையில் தயாரிப்பு தரப்பு சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வகையில் தந்திரமான வேலையை பார்த்து இருக்கிறது.