2019 ஆண்டு வெளியான இளையதளபதி விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை இந்துஜா. தமிழ் சினிமாவிற்கு மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் பிகில் படத்தில் தான் இவர் பெருமளவு பேசப்பட்டார்.
நடிகை இந்துஜா தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் பிறந்த தமிழ் பேசும் நடிகையாக இருப்பது கூடுதல் சிறப்பு. அதைதொடர்ந்து விளங்காத சில படங்களில் நடித்தாலும் இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்த மகாமுனி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
முதலில் கொஞ்சம் தொப்பையும் தொந்தியுமாக இருந்த இந்துஜா தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்து தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். இன்னிலையில் இந்துஜா மேயாத மான் படத்திற்கு முன்பாகவே அவர் நடித்த படம்தான் பில்லாபாண்டி.
இதை கதாநாயகனாக ஆர்கே சுரேஷ் நடித்திருந்தார். ஆகையால் சமீபத்தில் இந்துஜா அளித்த பேட்டி ஒன்றில் ‘தான் நடித்ததிலேயே மோசமான படம் பில்லா பாண்டி தான்’ என கூறியிருந்தார்.
இந்தப் பேட்டியை கேட்டபின் ஆத்திரமடைந்த ஆர்கே சுரேஷ் இந்திரஜாவை பகிரங்கமாக சாடியிருக்கிறார். அதாவது சினிமாவில் இந்துஜா நுழைந்த சமயத்தில் முதலில் ஆர்கே சுரேஷ் தான் அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் 4 படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்தார்.
ஆகையால் ‘நாம் எந்த இடத்தில் இருந்து வந்தோமோ அதை மறந்து விடக்கூடாது. முக்கியமாக ஏற்றி விட்ட ஏணியை ஒருகாலமும் உதைத்துக் கீழே தள்ள கூடாது’ என்றும் ஆதங்கத்துடன் ஆர்கே சுரேஷ் பேசியுள்ளார்.