பிப்ரவரி 16-யை குறிவைத்து ஓடிடியில் வெளியாகும் 23 படங்கள்.. மீண்டும் வசூல் வேட்டைக்கு தயாராகும் கேரளா ஸ்டோரி

February 16 OTT Release Movies : முன்பெல்லாம் திரையரங்குகளுக்கு சென்று படங்கள் பார்ப்பதே எட்டாக்கனியாக இருந்த நிலையில் இப்போது டிஜிட்டல் உலகில் கையில் இருக்கும் மொபைலிலேயே எக்கச்சக்க படங்கள் பார்க்க முடிகிறது. அதுவும் இப்போது ஓடிடியின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வாரமும் போட்டி போட்டுக் கொண்டு படங்கள் ரிலீஸ் ஆகிறது.

அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை பார்க்கலாம். தமிழ் மொழியில் அசோக் செல்வனின் சபாநாயகன் படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரூட் நம்பர் 17 படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்ட்வேர் ஒன் படம் வெளியாகிறது. மலையாளத்தில் ஜெயராம் நடிப்பில் உருவான ஆபிரகாம் ஒஸ்லர் படம் திரையரங்குகளில் டிசம்பர் 25 வெளியான அமேசான் பிரைமில் 16ஆம் தேதி வெளியாகிறது.

மேலும் கடந்த ஆண்டு மிகப்பெரிய வரவேற்பு பெற்ற கேரளா ஸ்டோரி படம் ஜீ5 ஓடிடி தளத்தில் பிப்ரவரி 16 வெளியாகிறது. ஏற்கனவே திரையரங்குகளில் நன்றாக கல்லா கட்டிய இந்த படம் இப்போது ஓடிடியிலும் வசூல் வேட்டைக்கு தயாராகி இருக்கிறது. மேலும் தமிழில் வேற மாறி லவ் ஸ்டோரி என்ற வெப் சீரிஸ் ஆஹா ஓடிடி வெளியாகிறது.

பாலிவுட்டில் ரைசிங்கனி vs ரைசிங்கனி என்ற படம் சோனிலைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் அமேசான் பிரைமில் லவ் ஸ்டோரியன் மற்றும் ஆர்யா சீசன் 3 ஆகியவை வெளியாகிறது. ஆகையால் இந்த வரும் ஓடிடி பிரியர்களுக்கு செம விருந்தாக இருக்க போகிறது.