ஹாட் ஸ்டார், டென்ட் கொட்டாவில் தரையிறங்கும் படங்கள்.. மிஸ் பண்ணாதீங்க!

Hotstar : ஜூலை 25ஆம் தேதி ஹாட்ஸ்டார் மற்றும் டென்ட்கொட்டா ஆகிய ஓடிடி தளங்களில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் ஜூன் மாதம் படைத்தலைவன் படம் வெளியானது.

இப்போது டென்ட் கொட்டா ஒடிடி தளத்தில் இந்த படம் வெளியாகிறது. மேலும் இதே தளத்தில் கலியுகம் படம் ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் பிரபு நடிப்பில் வெளியான ராஜபுத்திரன் படம் ரிலீஸ் ஆகிறது.

ஹாட் ஸ்டார் மற்றும் டென்ட் கொட்டா ஆகிய தளங்களில் வெளியாகும் படங்கள்

ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் மலையாளத்தில் உருவான Ronth மற்றும் தெலுங்கில் Sarzameen ஆகிய படங்கள் வெளியாகிறது. மேலும் ஆங்கிலத்தில் Washington Black என்ற சீரிஸ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது.

அதேபோல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் show time மற்றும் x & y ஆகிய படங்கள் வெளியாகிறது. மலையாளத்தில் உருவான Samshayam மனோரமா மேக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் peacock என்ற தளத்தில் ஆங்கிலத்தில் உருவான The Phoenician Scheme ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

BMS என்ற ஓடிடி தளத்தில் The Judgement என்ற கன்னட படம் மற்றும் ஆங்கிலத்தில் உருவான How to Train Your Dragon ஆகிய படங்களும் வெளியாகிறது. Lionsgate play series என்ற தளத்தில் The Suspect வெளியாகிறது.