இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 7 படங்கள்.. வருஷத்தோட முதல் வாரம் சொல்லிக்கிற மாதிரி இல்லையே

OTT Movies: 2025 நல்லபடியாக தொடங்கிவிட்டது. இந்த வருடம் அனைத்து ஹீரோக்களின் படங்களும் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. அதில் பொங்கல் ரிலீஸை தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.

அஜித்தின் விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அதன் ரிலீஸ் தள்ளி போயிருக்கிறது.

இதனால் பல சிறு பட்ஜெட் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. அதனால் இந்த வாரம் பெரிய அளவில் படங்கள் எதுவும் தியேட்டரில் வெளிவரவில்லை.

டிஜிட்டலை பொறுத்த வரையிலும் இதே நிலைதான். இருப்பினும் சில படங்கள் நாளை ஜனவரி 3ஆம் தேதி வெளியாகிறது அதை பற்றி இங்கு காண்போம்.

ஓடிடியில் வெளியாகும் 7 படங்கள்

இதில் சஸ்பென்ஸ் திரில்லர் படமான ஆரகன் மற்றும் லவ் ரெட்டி ஆகிய படங்கள் ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகிறது. ஹாலிவுட் படமான டிராப் ஜியோ சினிமாவில் வெளியாகிறது.

மேலும் மிஸ்ஸிங் யூ சீரிஸ் நெட்பிளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது. அதை அடுத்து மனோரமா மேக்ஸ் தளத்தில் மலையாள படமான ஐ அம் காதலன் ஜனவரி 3 வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற ஆல் தி இமேஜின் அஸ் லைட் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இது தவிர இத்தாலி ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் படங்கள் வெளியாகிறது.

ஆனாலும் வருடத்தின் முதல் வாரம் ஓடிடி பிரியர்களுக்கு சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. அடுத்த வாரமாவது தமிழில் தரமான படங்கள் வெளிவருகிறதா என பார்ப்போம்.

Leave a Comment