இந்த வாரம்  ஓடிடியில் வெளியாகும் 11 படங்கள்.. டிராகன் பார்க்க தயாரா மக்களே 

This Week OTT Release: கடந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்களில் எதுவுமே ரசிகர்களை கவரவில்லை. அந்த அளவுக்கு ராஜாகிளி, 2கே லவ் ஸ்டோரி என அனைத்தும் மொக்கையாக இருந்தது.

இந்த வாரமாவது ஏதாவது தேறுமா இல்லை கும்பிபாகம் தானா என பார்ப்போம். அதில் நாளை அமேசான் ப்ரைம் rent-ல் லாஸ்ட் பிரீத், மை டெட் ஃப்ரெண்ட் ஜூ ஆகிய படங்கள் வெளியாகிறது.

அடுத்ததாக 20ம் தேதி ஆபிஸர் ஆன் டியூட்டி netflix தளத்தில் வெளியாகிறது. பிரம்மானந்தம் தெலுங்கு படம் ஆஹா வீடியோவிலும் ஜிதேந்தர் ரெட்டி etv வின் தளத்திலும் வெளியாகிறது.

ஓடிடியில் வெளியாகும் 11 படங்கள்

மார்ச் 21ஆம் தேதி பேபி அண்ட் பேபி சன் நெக்ஸ்ட் தளத்திலும் ஓப்பன் ஹேமர் ஹாலிவுட் படம் நெட்பிக்ஸ் தளத்திலும் வெளியாகிறது. 

இது தவிர இந்த வாரம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டிராகன் netflixல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கடந்த வாரம் வெளியாக இருந்த ஃபயர் இந்த வாரம் வெளிவர இருக்கிறது. 

மேலும் உண்மை கதையை மையப்படுத்தி வெளியான ஜென்டில் உமன் டென்ட் கொட்டா தளத்தில் இந்த வாரம் வெளிவர இருக்கிறது. இப்படியாக வார இறுதியை மகிழ்விக்க பல படங்கள் வருகிறது.

Leave a Comment