This Week OTT Release: கடந்த வாரம் வெளியான டிராகன் தியேட்டர்களில் சக்கை போடு போட்டு வருகிறது. ஆனால் அதற்கு போட்டியாக மூன்று படங்கள் நாளை தியேட்டரில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
அதன்படி ஈரம் கூட்டணியின் சப்தம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திகில் காட்சிகளுடன் மிரட்ட வரும் இப்படம் பிப்ரவரி 28 நாளை வெளியாகிறது.
அதேபோல் மற்றொரு திரில்லர் படமான அகத்தியா நாளை வெளியாகிறது. ஜீவா, ராசி கண்ணா, அர்ஜுன், யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
எதிர்பாராத திருப்பங்களுடன் வரும் சுழல் 2
அதைத்தொடர்ந்து எஸ் ஏ சந்திரசேகர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் கூரன் நாளை வெளியாகிறது. இப்படத்தின் ட்ரைலரே வித்யாசமாக இருந்த நிலையில் படத்திற்கும் எதிர்பார்ப்பு உள்ளது.
அதை அடுத்து ஓடிடியில் இந்த வாரம் கண்டுக்களிப்பதற்கு ஏராளமான படங்கள் வருகின்றன. அதில் கதிர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சுழல் 2 வெப் தொடர் அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை வெளியாகிறது.
ஏற்கனவே சீசன் 1 வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதை அடுத்து ஆஹா தமிழ் தளத்தில் ஆபரேஷன் ராவண் தெலுங்கு படமும் தமிழ் படமான பறை நாளை வெளியாகிறது.
மேலும் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் மார்ச் 3ம் தேதி வெளியாகிறது. அதேபோல் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற சக்கராந்தி வஸ்துணம் ஜீ 5 தளத்தில் 28ஆம் தேதி வெளியாகிறது.
அதைத்தொடர்ந்து பியான்ட் தி 7 சீஸ் மலையாள படத்தின் தமிழ் டப்பிங் சிம்ப்ளி சவுத் தளத்தில் நாளை வெளியாகிறது. இப்படியாக பல படங்கள் வெளிவரும் நிலையில் விடாமுயற்சிக்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.