விடாமுயற்சியால் நொந்து போன சன் டிவி.. ஜனநாயகன் உட்பட கிடப்பில் உள்ள 3 படங்கள்

Sun Tv : ஒரு படம் ரிலீசுக்கு தயாரானால் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமம் விற்கப்படும். பெரும்பாலும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலைஞர் டிவி போன்ற தொலைக்காட்சிகள் தான் படங்களின் சாட்டிலைட் உரிமையைப் பெறுகிறது.

அவ்வாறு சன் டிவி விடாமுயற்சி படத்தை வாங்கியது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான விடாமுயற்சி படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. இந்த சூழலில் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி சன் டிவியில் விடாமுயற்சி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆனால் டிஆர்பியில் இந்த படம் மிகப்பெரிய அடியை வாங்கியது. இதைத்தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை வாங்குவதற்கு சன் நெட்வொர்க் தயக்கம் காட்டி வருகிறது. அந்த வகையில் தியேட்டரில் சக்கை போடு போட்ட குட் பேட் அக்லி படமே இன்னும் சாட்டிலைட் விற்பனை ஆகவில்லை.

விடாமுயற்சி படத்தால் வியாபாரம் ஆகாமல் இருக்கும் மூன்று படங்கள்

அதேபோல் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கும் இதே நிலைமை தான். மேலும் ஜனநாயகன் படத்தை சன் டிவி வாங்கி விட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது வரை இன்னும் ஜனநாயகன் படம் டிஜிட்டல் உரிமைக்கு விற்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய்யின் கடைசி படம் என்பதால் ஒட்டுமொத்த திரை உலகத்தின் எதிர்பார்ப்பும் இந்த படத்தின் மீது இருக்கிறது. ஆனாலும் விடாமுயற்சி கொடுத்த அடியால் ஜனநாயகன் படத்தை வாங்காமல் இருக்கிறது சன் நெட்வொர்க்.

அதோடு மட்டுமல்லாமல் விஜய் இப்போது அரசியலில் இறங்கி உள்ளதால் அவரது படத்தை சன் குழுமம் வாங்கினால் இதுவே சர்ச்சையாகும். அரசியலிலும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஜனநாயகன் படத்தை வாங்க தவிர்த்து வருகிறார்கள்.