இந்த வருடம் வெளியான 61 படங்களில் மூணு தான் ஹிட்டு.. விடாமுயற்சியை வீழ்த்திய குறட்டை நடிகர்

Vidaamuyarchi : இந்த வருடம் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை தமிழ் சினிமாவில் 61 படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த வகையில் இந்த வருடம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது அஜித்தின் விடாமுயற்சி. கிட்டத்தட்ட மூன்று வருடமாக அஜித்தின் விடாமுயற்சி படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் இது கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

ஆனால் குட் நைட் மூலம் ரசிகர்களை கவர்ந்த மணிகண்டன் நடிப்பில் குடும்பஸ்தன் படம் வெளியானது. நகைச்சுவை கலந்த படமாக வெளியான இப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அடுத்ததாக விஷாலின் மத கத ராஜா படமும் 12 வருடம் கழித்து வெளியானது.

இந்த வருடம் வெளியான மூன்று ஹிட் படங்கள்

சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பிப்ரவரி மாதம் வெளியானது பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம். இந்த படம் இப்போதும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் விடாமுயற்சி படத்தின் வசூலை முறியடித்துள்ளது.

மேலும் சமீபத்தில் ரியோ ராஜின் நடிப்பில் வெளியான ஸ்வீட் ஹார்ட் படம் ஓரளவு நேர்மையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மற்றபடி இந்த வருடம் வெளியான படங்கள் எதுவுமே ரசிகர்களிடம் செல்லுபடி ஆகவில்லை. வணங்கான், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்கள் எல்லாம் கலவையான விமர்சனங்கள் தான் பெற்றது.

ஆனால் 2025 முற்பகுதி இவ்வாறு இருந்தாலும் பின்னால் நிறைய பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகிறது. அஜித்தின் குட் பேட் அக்லி, தனுஷின் இட்லி கடை, கமலின் தக் லைஃப் மற்றும் இந்தியன் 3, ரஜினியின் கூலி ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. மேலும் இந்த படங்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

Leave a Comment