துணிவுக்கு பின்னால் இருக்கும் பெரிய பலம்.. வசூலில் பெரிய அடி வாங்க போகும் வாரிசு

முன்பு எந்த ஒரு படத்திற்கும் இல்லாத அளவிற்கு இப்போது துணிவு மற்றும் வாரிசு படத்தை பற்றி தான் இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது. தளபதி விஜயின் படங்கள் எப்போதுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வசூல் சாதனை படைக்கும். அதேபோல் தான் அஜித்தின் படமும்.

இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு படம் ஒரே நாளில் வெளியாவதால் இந்த இரண்டு படங்களின் வசூலுமே பாதிக்கும். அதுமட்டுமின்றி இந்த இரு படங்களில் எந்த படம் அதிக வசூல் செய்யும் என்ற போட்டியும் நிலவும். இப்போது வாரிசு படம் தான் வசூலில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் துணிவுக்கு பின்னால் மிகப்பெரிய பலம் உள்ளது. அதாவது சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கிய நடிகர்களின் படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட்ட வருகிறது. உதயநிதி நடிகர் மட்டுமல்லாமல் அரசியல் பின்புலமும் உடையவர் என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் இவருக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி தற்போது விளையாட்டு துறை அமைச்சராகவும் உதயநிதி பதவியேற்று உள்ளார். ஆகையால் துணிவு படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதி பெற்றுள்ளதால் கண்டிப்பாக இந்த படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும்.

சமீபத்தில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கூட விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் அதனால் வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் கொடுக்கும்படி உதயநிதியிடம் கேட்க உள்ளதாக கூறினார். ஆனால் எப்படியும் துணிவு படத்துடன் வாரிசு போட்டியிட்டால் நஷ்டம் தில் ராஜுக்கு தான்.

ஆகையால் பொங்கல் ரிலீஸில் இருந்து வாரிசு படம் பின்வாங்கும் என கணிக்கப்படுகிறது. ஆனால் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீசாவது 100 சதவீதம் உறுதியாகி உள்ளது. ஒருவேளை அஜித்துக்கு பயந்து வாரிசு படத்தின் ரிலீஸை மாற்றிவிட்டார்கள் என்று சொல்லக்கூடாது என்பதற்காக துணிவுடன் போட்டியிடவும் விஜய் தயாராக இருப்பார்.