அஜித் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி இருக்கும் துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். பேங்க் ராபரியை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் துணிவு படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார். ஆரம்பத்தில் இருந்து துணிவு படம் நல்ல வசூலை ஈட்டி வந்தது. ஆனால் வசூல் விவரம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. இப்போது துணிவு படத்தின் கலெக்ஷன் வெளியாகி உள்ளது.
அதாவது சைலன்டாக துணிவு படம் பல கோடியை வசூல் செய்திருக்கிறது. அதாவது வாரிசு படத்திற்கு போட்டியாக வெளியான துணிவு படம் முதல் நாளே 24.59 கோடி தமிழ்நாட்டில் வசூல் செய்திருந்தது. மேலும் துணிவு படத்திற்கு நேர்மையான விமர்சனங்கள் கிடைத்து வந்ததால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அந்த வகையில் உலகம் முழுவதும் மூன்றே நாட்களில் 100 கோடி வசூல் செய்தது. நேற்று 7வது நாள் முடிவில் உலக அளவில் தமிழ்நாட்டிலும் துணிவு படம் சாதனை படைத்துள்ளது. அதாவது யாரும் எதிர்பார்க்காத அளவு நேற்று தமிழ்நாடு முழுவதும் 100 கோடி வசூலும், உலகம் முழுவதும் 200 கோடி வசூலும் துணிவு படம் செய்துள்ளது.
இதனால் தற்போது துணிவு படக்குழு உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளதாம். ஏனென்றால் இப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வினோத் இந்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பாரா என்ற பயமும் நிலவி வந்தது. துணிவு படம் மக்களுக்கு பிடித்ததால் கொண்டாடத் தொடங்கினார்கள்.
மேலும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் துணிவு படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இதற்கு முன்னதாக மற்ற மாநிலங்களில் அஜித் படத்திற்கு இந்த அளவு வரவேற்பு கிடைத்ததில்லை என்று கூறப்படுகிறது. மேலும் துணிவு படத்தின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் அஜித் கவர்ந்து உள்ளார்.