தாறுமாறாக எகிறிய வாரிசு-வின் டிக்கெட் விலை.. ஒரு பாப்கார்ன், ஒரு கொக்ககோலா ஃப்ரீ என விளம்பரம் வேற

பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசு மற்றும் துணிவு படத்தின் முதல் நாள் காட்சியை பார்ப்பதற்காகவே தல, தளபதி ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் இரண்டு படங்களின் டிக்கெட் தாறுமாறாக விற்கப்படுகிறது. அதிலும் வாரிசு படத்தின் ஒரு டிக்கெட் விலையை கேட்டால் தலை சுற்றி விழ வைக்கிறது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலன்று வாரிசு திரைப்படத்திற்கு அதிக டிக்கெட் விற்பனை என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. அதையும் தாண்டி இப்பொழுது அதிக பணத்திற்காக டிக்கெட் விற்கப்படுகிறது. அதுவும் முதல் காட்சிக்கு ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 3000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது அனைத்து திரையரங்குகளும் செய்கிறார்கள். அதற்கு ஒரு பாப்கார்ன், ஒரு கொக்ககோலா ஃப்ரீ என்று விளம்பரம் செய்கின்றனர். முன்பு ஆயிரம், இரண்டாயிரம் என முதல் நாள் காட்சிக்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள் இப்போது 3 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.

இதை அரசாங்கம் கேட்கமுடியாது என்பதால் இவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட்டை ரசிகர்கள் வாங்க தடையாக இருக்கிறது. நாங்கள் அப்படித்தான் இருப்போம் என்று தியேட்டர் அதிபர்கள் திமிராக பேசி வருகின்றனர். இதற்கு யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் போகாமல் இருந்தால் நல்லது என பிரபலங்கள் பேச்சு.

எனவே ஜனவரி 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் அஜித்தின் துணிவு படத்தையும், ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் வாரிசு படத்தையும் ரணகளம் செய்த ரசிகர்களுக்கு டிக்கெட் விலை கேட்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பல சர்ச்சைகளும் கிளம்பி இருக்கிறது.

மேலும் இந்த இரண்டு படங்களையும் வைத்து லாபத்தை அள்ள வேண்டும் என நினைக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ரசிகர்கள் சப்போர்ட் கொடுக்காமல் விட்டுவிட்டால் தான், அடுத்த முறை டிக்கெட்-டின் விலையை தாறுமாறாக உயர்த்தாமல் இருப்பார்கள்.