திக் திக் 4 படங்கள்.. திரையில் மக்கள் அரண்டபோன காட்சி இதுதான்

Cinema : காதல் திரைப்படங்களை விட தற்போது ஹாரர் படங்களை விருப்பமாக வைத்திருக்கின்றனர் இளைஞர் சமுதாயம். அதிலும் அந்த திக் திக் காட்சிகள் தான் ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருக்கிறது.

கற்பனை கலந்த காட்சியாக இருந்தாலும், நம் கண் முன்னே வருவது போல தோன்றுவது தான் ஹாரர் மூவிஸ். தொடர்ச்சியாக பல சீரியஸ்கள் எடுக்கப்பட்ட ஹாரர் மூவிஸ் தமிழில் டாப்பில் உள்ளது. அந்த வகையில் ஹாரர் திகிலிட்டும் திரைப்படங்களில் 4 தமிழ் திரைப்படங்களை பற்றி தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

காஞ்சனா :

ராகவா லாரன்ஸ் இன் அதிரடி கிளப்பிய காஞ்சனா திரைப்படம் 2011 இல் காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக ரிலீஸ் ஆனது. இதில் ஹைலைட் ராகவா லாரன்ஸ் மற்றும் கோவை சரளாவின் காமெடி தான். இந்த திரைப்படம் பயங்கரமான நல்ல விமர்சனத்தை பெற்றது.

தொடர்ந்து காஞ்சனா 2, காஞ்சனா 3, காஞ்சனா 4 என தொடர்ந்து படத்தின் பாகங்கள் வெளியானது. எத்தனை பாகங்கள் வந்தாலும் மக்கள் மத்தியில் சலிக்காத திரைப்படம் காஞ்சனா தான். அந்த அளவிற்கு திரையில் ஹாரர் கலந்த காமெடி திரைப்படமாக மாறியுள்ளது.

அரண்மனை :

சுந்தர் சி இயக்கத்தில் 2014 இல் வெளியான திரைப்படம், சிரிப்பும் சஸ்பென்சும் கலந்த அரண்மனை ஒரு வெற்றி திரைப்படமாக மாறியது. இதில் ஹன்சிகா மோத்வானி எந்த திரைப்படத்திலும் இல்லாத அளவிற்கு நடித்திருப்பார். இந்தத் திரைப்படமும் டாப் லிஸ்டில் ஒன்றுதான். இதையடுத்து அரண்மனை பாகம் 2, 3, 4 என சுந்தர் சி தொடர்ந்து இயக்கினார்.

டிமான்டி காலனி :

2015 ஆம் ஆண்டு நிறைய சஸ்பென்ஸ் வைத்து டிமான்டி காலனி படம் திரையில் வெளியிடப்பட்டது. இது திரைப்படத்தில் அருள்நிதி தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த ஹாரர் திரைப்படம் பயங்கர ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து பாகம் இரண்டு எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு 2024 டிமான்டி காலனி 2 திரைப்படம் வெளியானது.

தில்லுக்கு துட்டு :

2016 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு திரைப்படம் வெளியானது. பேய் படம் என்பதால் ஹாரருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. சந்தானம் காமெடியில் கலக்கி இருப்பார். இதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் 2-ஆம் பாகம் ரிலீஸ் ஆனது.