தளபதி விஜயின் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீசாக காத்திருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய ரசிகர்களுக்கு வித்தியாசமான விஜயை காண்பிக்க வேண்டும் என அதற்கான கதையை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார். இதுவரை விஜய் எல்லாவிதமான கதைகளிலும் நடித்ததால், ஏதாவது வித்தியாசம் வேண்டும் என்று எல்லா இளம் இயக்குனர்களிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்.
எல்லா இயக்குனர்களும் ஒரே மாதிரி ஸ்டோரியை வித்தியாச வித்தியாசமா கொடுத்து தங்களுடைய மசாலாவை விற்று வருகின்றனர். சமீபத்தில் அவர் பார்த்து ரசித்த படம் லவ் டுடே. படத்தை பார்த்து அட்ராக்ட் ஆன விஜய் உடனே ரகசிய தூது விட்டு பிரதீப்பை வரச் சொல்லி விட்டாராம்.
நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இரண்டாவதாக இயக்கி ஹீரோவாக அறிமுகமாகி நடித்த திரைப்படம் தான் லவ் டுடே, கோமாளி திரைப்படம் எந்த அளவிற்கு ஹிட்டானதோ அதற்கு ஒரு படி மேலாகவே லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.
காதல், குடும்பம், சென்டிமெண்ட், யுவனின் இசை என இத்திரைப்படத்தில் அனைத்துமே படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. எனவே லவ் டுடே படத்திற்குப் பிறகு இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் மவுசு கூடிவிட்டது. அதற்கேற்றார் போல் தற்போது விஜய்யை சந்தித்த பிரதீப் ரங்கநாதன் ஒரு சூப்பர் ஸ்டோரியும் சொல்லி அசத்தி விட்டாராம்.
பிரதீப் சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டது. அது ஒரு சயின்ஸ் பிக்சன் படமாம். கதை பிடித்த போன விஜய் இதை பண்ணலாம் என்று கூறியிருக்கிறாராம். கூடிய விரைவில் வித்தியாசமான புது விஜய் படத்தை எதிர்பார்க்கலாம்.
இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான டிக் டிக் டிக், இன்று நேற்று நாளை வரிசையில் அடுத்து வருகிறது விஜய் படம். எனவே விஜய் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான முழு விவரமும் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.