VJ Siddhu: விஜே சித்து பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எந்த ஒரு ஸ்ட்ரெஸ் டென்ஷன் இருந்தாலும் அவருடைய வீடியோக்களை பார்த்தால் அத்தனையும் பறந்து போய்விடும்.
அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. அதே போல் ரசிகர்களுக்கு விருந்து வைத்து பெருமைப்படுத்திய யூடியூபரும் இவர்தான். சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் கூட இவர் நடித்திருந்தார்.
அதையே ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் தற்போது அவர் இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பது வாழ்த்துக்களை பெற்று வருகிறது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்தில் தான் அவர் இயக்குனர் ஆகியுள்ளார்.
இயக்குனரான விஜே சித்து
அதன் அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. தனுஷ் அந்த டைட்டில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் விஜே சித்து கேங் உடன் நடக்கும் அலப்பறை பார்க்கவே ரகளையாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து படத்திற்கு டயங்கரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதே போல் எங்கள் அண்ணன் ஜெயிச்சாச்சு என சித்துவின் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.