கோலிவுட்டில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற சில படங்களை மட்டுமே இயக்கினாலும் எடுத்த படம் எல்லாம் சூப்பர் ஹிட் என்ற காரணத்தினால் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்யின் லியோ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
லியோ படத்தை படத்தில் விஜய்யுடன் இணைந்து அர்ஜுன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத் என பல நட்சத்திரங்களை வைத்து செதுக்குகிறார் லோகேஷ். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுது தெலுங்கில் இருந்தும் ஒரு மாஸ் ஹீரோவை இறக்குவதாக ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் ராம் சரணை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். அவருக்கும் ஒரு ஒன் லைன் கதை சொல்லி ஓகே செய்து வைத்திருக்கிறார். இப்பொழுது லியோ பான் இந்தியா படம் என்பதால் எல்லா லாங்குவேஜில் இருந்தும் நடிகர்கள் நடிக்கிறார்கள். தெலுங்கில் மட்டும் யாரும் இல்லை . ஒரு வேலை ராம்சரணை நடிக்க வைத்தால் தெலுங்கு பக்கமும் இந்த படத்தின் பிசினஸை பெருக்கிக் கொள்ளலாம். அதனால் இப்படி ஒரு ஏற்பாடு செய்யப் போகிறாராம் லோகேஷ்.
மல்டி சூப்பர் ஸ்டார் இணைந்து நடிக்கும் இந்த படத்தை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்பது லோகேஷின் எண்ணம். அதற்கேற்றார் போல் படப்பிடிப்பிற்கு முன்பே 500 கோடி லாபம் பார்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் லோகேஷ் இந்த படத்தின் பிரமாண்டத்தை இன்னும் அதிகப்படுத்தவே நினைக்கிறார்.
அதனால் தான் பிற மொழிகளில் ரசிகர்களுக்கு பரிச்சையுமான டாப் ஹீரோக்களை லியோ படத்தில் இணைத்து வேற லெவலுக்கு மாஸ் காட்டுகிறார். அதிலும் இப்போது தெலுங்கில் ராம் சரணை லியோ படத்தில் இணைப்பதற்காகவே அவரிடம் கதை சொல்லி தனியாக ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். அதற்காகவே ராம்சரண் இந்த படத்தில் நடிக்கும் ஒத்துக்கொள்வார் என்பது லோகேஷின் தில்லாலங்கடி டிராமா.
எப்படியோ எல்லா ஸ்டேட் ஹீரோக்களையும் ஒரே படத்தில் இணைத்து பிசினஸில் ஒரு அள்ளு அள்ள வேண்டும் என்ற முடிவில் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு லோகேஷ் தயாரிப்பாளராக மாற வேண்டும் என்ற பெரிய கனவுடனும் இருப்பதால் லியோ படத்தின் மூலம் வாரி சுருட்ட வேண்டும் என்பதற்காகவே அக்கட தேசத்தில் டாப் ஹீரோவுடன் கூட்டணி போடுகிறார்.