2024ல் அதிக வசூல் செய்த டாப் 7 படங்கள்.. நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்த விஜய்

Vijay : 2024 கடந்த வருடம் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த ஏழு படங்களை இந்த பதிவில் பார்க்கலாம். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை  4 படம் ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடி வசூலை எட்டியது. 

அடுத்ததாக ஆறாவது இடத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் இருக்கிறது. ஷங்கர் இயக்கிய இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் பாக்ஸ் ஆபீஸில் கிட்டத்தட்ட 150 கோடி வசூலை பெற்றது. 

ஐந்தாவது இடத்தில் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ராயன் படம் உள்ளது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன், துஷாரா விஜயன் போன்றோர் நடித்திருந்தனர். இப்படம் 155 கோடி வசூலை வாரி குவித்தது. 

2024-ல் அதிக வசூல் பெற்ற டாப் 10 படங்கள்

நான்காவது இடத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் இருக்கிறது. சைலன்டாக வெளியான இந்த படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. மகாராஜா படம் 180 கோடி வசூலை பெற்று இருந்தது.

ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த படம் 250 கோடி வசூலை வாரி குவித்தது. இரண்டாவது இடத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் உள்ளது. 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படம் 320 கோடி வசூலை பெற்றது. முதலாவது இடத்தில் எப்போதும் போல வசூல் மன்னனான விஜய் இருக்கிறார். அவரது கோட் படம் 450 கோடி வசூலை பெற்றது.