டாப் 10 இடத்தை பிடித்த தமிழ் படங்கள்.. நெட்பிளிக்ஸை ஆட்டம் காண வைத்த விஜய் சேதுபதி

Vijay Sethupathi : ஓடிடியில் வெளியாகும் படங்களில் டாப் 10 இடங்களை பிடித்த தமிழ் படங்கள் என்ன என்று பார்க்கலாம். இதில் பத்தாவது இடத்தில் நெல்சன், விஜய் கூட்டணியில் உருவான பீஸ்ட் படம் இருக்கிறது. இப்படம் 7.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது.

அடுத்ததாக ஒன்பதாவது இடத்தை இந்த வருடம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம் பெற்றிருக்கிறது. எட்டாவது இடத்தில் மணிரத்தினம் மற்றும் கமல் கூட்டணியில் உருவான இந்தியன் 2 கைப்பற்றி இருக்கிறது. இந்த படம் தியேட்டரில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.

ஆனாலும் நெட்பிளிக்சில் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது மெய்யழகன் படம். இதில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இணைந்து நடித்திருந்தனர். ஆறாவது இடத்தை தனுஷின் வாத்தி படம் பெற்றிருக்கிறது.

நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 10 தமிழ் படங்கள்

வெங்கட் பிரபு, விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் 12 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் நான்காவது இடத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் கைப்பற்றியுள்ளது. இப்படம் தியேட்டரிலும் நல்ல வசூலை பெற்றது.

மூன்றாவது இடத்தில் துணிவு படம் உள்ளது. அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்த இந்த படம் 16 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தில் லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான லியோ படம் உள்ளது.

நெட்பிளிக்சையே ஆட்டம் காண வைத்து முதல் இடத்தில் இருக்கிறது விஜய் சேதுபதியின் மகாராஜா படம். இது கிட்டத்தட்ட 27 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இப்போது முதலிடத்தில் இருக்கிறது. விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறது மகாராஜா.