திரை உலகில் ரசிகர்களிடம் பாப்புலரான நடிகர் நடிகைகளின் லிஸ்ட் ஒவ்வொரு மாதமும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகப் பரவும். அந்த வகையில் இந்த மாதம் வெளியான லிஸ்டில் முதலிடத்தில் தமிழ் பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் டாப் 10 நடிகர்களில் முதலிடம் விஜய்க்கு கிடைத்திருக்கிறது. தமிழ் பிரபலமான விஜய் தமிழில் மட்டுமல்லாமல் உலக அளவில் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். இவரது படங்கள் அனைத்தும் திரையரங்கில் தாறுமாறாக ஓடுவதற்கு காரணம் அவருக்கு இருக்கும் ரசிகர் வட்டத்தில் தான்.
ஆகையால் இந்திய அளவில் பாப்புலரான நடிகர்களில் முதலிடம் விஜய் இருப்பதை வைத்து தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கெத்துக் காட்டுகின்றனர், இதைத் தொடர்ந்து 2-வது இடம் தெலுங்கு பிரபலம் பிரபாஸ் பெற்றிருக்கிறார். 3-வது இடம் ஜூனியர் என்டிஆர்-க்கும், 4-வது இடம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் 5-வது இடம் கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ்-க்கும் கிடைத்திருக்கிறது.
6-வது இடம் ராம் சரணுக்கு கிடைத்திருக்கிறது. 7-வது இடத்தை தான் முதல் முதலாக பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் பெற்றிருக்கிறார். 8-வது இடம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கும், 9-வது இடம் தமிழ் நடிகரான சூர்யா பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் தல அஜித் ஆள் அட்ரஸ் தெரியாமல் இந்த லிஸ்டில் மறைந்திருக்கிறார் என நினைத்துக் கொண்டிருக்கும்போது, 10-ம் இடம்தான் தல அஜித்துக்கு கிடைத்திருக்கிறது.
இதைப்போன்று இந்திய அளவிலான டாப் 10 நடிகைகளில் லிஸ்டில் முதலிடம் சமந்தாவிற்கு கிடைத்திருக்கிறது.2-வது இடம் ஹிந்தி பிரபலம் ஆலியா பட் பிடித்திருக்கிறார். 3-வது இடம் நயன்தாராவிற்கும், 4-வது இடம் காஜல் அகர்வாலுக்கும், 5-வது இடம் தீபிகா படுகோனே-க்கும் கிடைத்துள்ளது.
6-வது இடம் கீர்த்தி சுரேஸ்க்கும், 7-வது இடம் பூஜா ஹெக்டே பெற்றிருக்கிறார். இதைத்தொடர்ந்து 8-வது இடம் ராஷ்மிகா மந்தனாக்கும், 9-வது இடம் கத்ரீனா கைப், 10-வது இடம் கியாரா அத்வானி பெற்றிருக்கிறார்.
இவ்வாறு தமிழ் பிரபலங்களான சமந்தா மற்றும் விஜய் இருவரும் டாப் 10 பாப்புலர் நடிகர் நடிகைகளில் முதல் இடத்தைப் பெற்றிருப்பது கோலிவுட்டுக்கு பெருமை அளிக்கிறது. இருப்பினும் தல அஜித் 10-வது இடத்தை பிடித்தது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.