அக்கட தேசத்தில் ஆதிக்கம் செய்யும் 5 நடிகர்கள்.. மார்க்கெட்டை எகிற வைத்து டாப்பில் ஜொலிக்கும் விஜய்

Top 5 Influential Actors in Kerala:  ஒவ்வொரு வட்டாரத்திலும் ரசிகர்களின் மனதை வென்று உச்ச நட்சத்திரங்களாக டாப் 5 இடத்தில் முன்னணி நடிகர்கள் ஜொலித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு மற்ற மொழிகளிலும் அதிக அளவில் மவுஸ் உண்டு. முக்கியமாக விஜய் ஆல் ரவுண்டு கில்லியாக அனைத்து இடங்களிலும் மார்க்கெட்டை எகிற வைத்து விட்டார்.

அந்த வகையில் விஜய் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியினாலே ஒரு திருவிழா மாதிரி மற்ற மொழிகளிலும் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். அப்படி விஜய் படம் வெளிவரும் பொழுது கேரளாவில் அதிக எண்ணிக்கையில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வசூலை அதிகரித்து விடுவார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் கேரளாவில் வெளியீட்ட 30 நாட்களுக்குள் 60 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

இவரை போல நடிகர் சூர்யாவுக்கும் கேரளாவில் அதிக வரவேற்பு உண்டு. அதனால் தமிழ் சினிமாவில் இருந்து எப்பொழுதுமே இவர்கள் இருவருக்கும் தனித்துவமான இடம் என்பதற்கு ஏற்ப விஜய் மற்றும் சூர்யாவும் ரசிகர்களை வென்றிருக்கிறார்கள். இதற்கு இடையில் அங்கே முன்னணி நடிகர்களாக ஜொலிக்கும் சில நடிகர்களுக்கும் எப்பொழுதுமே அதிக மார்க்கெட் உண்டு.

Also read: விஜய் எனக்கு போட்டியா!.. தன்னுடைய ஸ்டைலில் ரசிகர்களுக்கு பதில் சொன்ன ரஜினி

அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் மம்முட்டி இவர்களுக்கு ஏகபோக வரவேற்பு கொடுத்து விடுவார்கள். இதனைத் தொடர்ந்து இளம் நடிகராக ஜொலித்து வருபவர் துல்கர் சல்மான். சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பத்தில் மலையாள படங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்.

ஆனால் போகப்போக தமிழ் சினிமாவிலும் பேரும் புகழையும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் சீதா ராமம் என்ற படத்தை தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிட்டதை தொடர்ந்து இவருக்கு ஏகபோக வரவேற்பு நாளா பக்கமும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. தற்போது இவர்கள் ஐந்து பேரும் தான் கேரளாவில் செல்வாக்கு மிகுந்த நடிகர்களாக ஜொலிக்கிறார்கள்.

Also read: அதிரடியாக கட்சியை அறிவிக்கும் விஜய்.. விசுவாசிகளுக்கு வைத்த முக்கியமான வேண்டுகோள்