போர் தொழில் படத்தில் மிஸ்ஸான 5 மட்டமான லாஜிக்.. காசு வராததால் கழுவி ஊற்றிய பயில்வான்

Movie Por Thozhil: சமீபத்தில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி சினிமா விமர்சகர் பலரும் இந்த படத்திற்கு நெகட்டிவே சொல்ல முடியாத அளவுக்கு விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் மற்றும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் போர் தொழில் படம் பற்றி விமர்சனம் செய்துள்ளார். அதாவது படத்தின் டைட்டில் தொடங்கி ஐந்து லாஜிக் மிஸ்ஸிங் என பயில்வான் கூறியிருக்கிறார். அதாவது படத்தின் டைட்டில் போர் தொழில் என்று வைக்கப்பட்டிருக்கிறது.

போர்த் தொழில் என நடுவில் த் வைத்திருந்தால் இப்படம் போர்க்களத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கருதலாம். ஆனால் போர் தொழில் என டைட்டில் வைத்திருப்பதால் தண்ணீர் பெறுவதற்காக போடும் போர் தொழில் செய்யும் படமாக இருக்கும் என்றால் அதுவும் இல்லை.

அதுமட்டுமின்றி போர் தொழில் படத்தில் முதல் பாதியில் எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு நன்றாக எடுத்து இருக்கிறார்கள். ஆனால் இரண்டாம் பாதியில் மொத்தமாக சொதப்பிவிட்டனர். மேலும் இதே போல் கிரைம் திரில்லர் படங்கள் தமிழ் சினிமாவில் நிறைய வெளியாகியிருக்கிறது.

அதில் போர் தொழில் ஒரு சாதாரண படமாக தான் எடுத்திருக்கிறார்கள். முதலில் படத்தில் யாரை கொலைகாரன் என்று சொல்வதிலேயே இயக்குனர் குழம்பி விட்டார். முதலில் சரத்பாபு தான் இந்த கொலைகளை செய்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. அடுத்ததாக அம்மா, அப்பாக்குள் சண்டை வருவதால் மகன் சைக்கோ கொலைகாரனாக மாறுகிறானா என்ற சந்தேகம்.

எல்லா வீட்டிலும் அம்மா, அப்பா இன்று இருந்தால் சண்டை வருவது சர்வசாதாரணம். அடுத்ததாக பொண்டாட்டியை திருப்திபடுத்த முடியாத ஒருவரின் மீது சந்தேகப்படுகிறார்கள். அவர் பார்ப்பதற்கே தொந்தியும், தொப்பையும் ஆக இருக்கக்கூடியவர். இப்படி ஒரு ஆள் பெண்களை தூக்கிக் கொண்டு போய் எப்படி கொலை செய்ய முடியும் என்ற லாஜிக்கே இயக்குனருக்கு தெரியவில்லை. மேலும் கணவனின் கையற்ற நிலையால் மனைவி தவறான வலியை தேர்ந்தெடுக்கிறார்.

இதை ஏற்றுக் கொள்ள முடியாத கணவன் சைக்கோவாக மாறுகிறான். எப்படியாவது காதில் பூ சுத்துவது போல, கணவன் மீது பழியைப் போட வேண்டும் என கேனத்தனமான, கிறுக்குத்தனமான கதையாக போர் தொழில் உள்ளது. இதுபோன்ற கொலைக்கான ஒரு சரியான காரணத்தை இயக்குனரால் கொடுக்க முடியவில்லை என பயில்வான் கிழித்து தொங்கவிட்டுள்ளார். பலரும் இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்து வரும் நிலையில் தயாரிப்பு தரப்பில் இருந்து பயல்வானுக்கு காசு வராததால் இப்படி விமர்சித்துள்ளாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.