முன்னணி நடிகருக்கு சொல்லப்பட்ட என்னை நோக்கி பாயும் தோட்டா.. வெந்த புண்ணில் வேல் பாய்ஞ்சுருக்கும்!

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கேள்வியை இதற்கு முன்னர் சந்தித்ததே இல்லை எனும் அளவுக்கு தனுஷ் கேரியரை மிகவும் பாதித்த திரைப்படம்தான் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்தப்படம் மாபெரும் தோல்வியைத் தழுவியது.

ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துக்களில் சிக்கி சின்னாபின்னமான இந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெற்றிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் மரண மொக்கை என்ற பெயர் வாங்கி தோல்வியை தழுவியது.

ஆனால் இந்த படத்தின் கதை முதன் முதலில் பிரபல முன்னணி நடிகர் என்று சொல்லப்பட்டதாம். ஆனால் அவர் இந்த கதையை கேட்டதும் தயவு செய்து இந்த கதையை எடுத்துவிட்டு போய்விடுங்கள் என்று சொல்லாத குறைதானாம்.

அவர் வேறு யாரும் இல்லை. நம்ம சூர்யா தான். துருவ நட்சத்திரம் படத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அதன் பிறகு மீண்டும் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நட்பை புதுப்பிக்க யோசித்துள்ளனர்.

அந்த நேரத்தில்தான் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் கதையை சொல்லியுள்ளார் கவுதம் மேனன். கதையைக் கேட்டதும் அந்த நட்பே வேண்டாம் என ஜகா வாங்கி விட்டாராம் சூர்யா. அதாவது வேறு ஒரு நல்ல கதையாக இருந்தால் சொல்லுங்கள் எனக் கூறி மரியாதையாக அனுப்பி வைத்துவிட்டாராம்.

அதன்பிறகு நீண்ட நாட்கள் கழித்து தற்போது தான் மணிரத்னம் இயக்கும் நவரச என்ற வெப் சீரிஸில் கிட்டார் கம்பி மேலே நின்று என்ற குறும்படத்தை இணைந்து உருவாக்கியுள்ளனர்.

suriya-gautham-menon-cinemapettai
suriya-gautham-menon-cinemapettai