பெரிய ஹீரோக்களுக்கு நிகராக ஒரு படத்தை இயக்குவதற்காக தற்போது இளம் இயக்குனர்கள் வாங்கும் சம்பளத்தை கேட்டால் அதிர்ச்சியடைய செய்கிறது. அதிலும் ஒரு படம் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து விட்டால் ஜெட் வேகத்தில் சம்பளத்தை ஏற்றி விடுகிறார்கள். அப்படி அதிக சம்பளம் வாங்கும் 5 இயக்குனர்கள்.
அட்லி குமார்: ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லீ. இன்று அவர் தொடாத உச்சம் இல்லை. அம்பானி வீட்டில் சிறப்பு விருந்தினராக மாறும் அளவிற்கு இவர் கொடி பறக்கிறது. எல்லாத்துக்கும் காரணம் ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ஜவான் படம் தான். புதிதாய் இயக்கப் போகும் படத்துக்கு 110 கோடிகள் சம்பளம் வாங்க போகிறார்.
லோகேஷ் கனகராஜ்: கோடம்பாக்கத்தில் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கூலி, கைதி 2 என அடுத்தடுத்து படங்கள் இயக்க உள்ளார். ரஜினியின் கூலி படத்தை இயக்குவதற்கு இவர் வாங்க போகும் சம்பளம் 60 கோடிகள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
நெல்சன் திலீப் குமார்: ரஜினியின் அடுத்த லைன் அப்பிள் உருவாக போகும் படம் ஜெய்லர் 2 . இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். இந்த படத்திற்காக அவர் வாங்க போகும் சம்பளம் 60 கோடிகள். ஏற்கனவே 35 கோடிகள் முதல் பாகத்திற்காக வாங்கி உள்ளார்.
ஷங்கர்: ஒரு காலத்தில் எல்லாரையும் விட அதிகம் சம்பளம் வாங்கியவர் சங்கர். விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற இவர் இன்று வாங்கி வரும் சம்பளம் 35 கோடிகள்.
ஹெச் வினோத்: சதுரங்க வேட்டையில் ஆரம்பித்தார் தனது கேரியரை. அதன்பின் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அஜித்தை வைத்து வலிமை, நேர்கொண்ட பார்வை, துணிவு போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்பொழுது விஜய்யின் ஜனநாயகன் படத்தை இயக்குவதற்கு இவர் வாங்கப் போகும் சம்பளம் 20 கோடிகள்.