இதுவரை மூன்று தலைமுறையாக வெளிவந்த மொத்த படங்கள்.. எம்ஜிஆரை மிஞ்சி பேசப்பட்ட இரண்டு ஜாம்பவான்கள்

நாடகத் துறையை மேம்படுத்தும் முயற்சியில் கொண்டுவரப்பட்டது தான் சினிமா. மேலும் கருத்துகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இவை அமைந்திருக்கும். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் அவர்களையே மிஞ்சிய இரண்டு ஜாம்பவான்கள் இருந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் தொடக்கமாக பார்க்கையில் 1931 ஆம் ஆண்டு படங்கள் வெளியிட முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து முதல் பேசும் படமாக காளிதாஸ் தமிழிலும், தெலுங்கிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை எஸ் எம் ரெட்டி இயக்கியுள்ளார்.

அதை தொடர்ந்து பல நடிகர்கள் படங்களில் நடிக்க முன் வந்தனர். அக்கால ஜாம்பவான்கள் என்று தியாகராஜ பாகவதர் மற்றும் பி யு சின்னப்பாவை கூறுவார்கள். இவர்களின் படைப்புகள் மக்களை பெரிதளவு ஈர்க்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து எம்ஜிஆர் அவர்கள் தன் நடிப்பினை வெளிக்காட்ட தமிழ் சினிமாவை தேர்ந்தெடுத்துள்ளார். இவர்களின் படைப்புகள் இன்று வரை நீங்காத காவியமாக அமைந்து வருகிறது. மேலும் தமிழ் சினிமா என்றாலே இத்தகைய மூன்று ஜாம்பவான்கள் தான் நம் நினைவுக்கு வருவார்கள்.

இதில் குறிப்பாக எம்ஜிஆர் 1936 ஆம் ஆண்டு தன் முதல் பாடமான சதி லீலாவதியில் நடித்துள்ளார். எல்லிஸ் டங்கன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் எம் கே ராதா, டி எஸ் பாலையா ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இதை தொடர்ந்து 20 வருடத்திற்கு முன்பு அதாவது 1931 ஆண்டிலிருந்து மே 12 2003 வரை கணக்கு எடுக்கப்பட்ட பதிவின்படி தமிழ் சினிமாவில் சுமார் 7946 படங்கள் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஓ டி டி மற்றும் பல மொழி மாற்ற படங்களும் அடங்கும். இத்தகைய சினிமா தற்போது 3 தலைமுறை வளர்ச்சியை கொண்டு வந்திருக்கிறது என்பது பெருமை படக்கூடிய செய்தி ஆகும்.