டூரிஸ்ட் ஃபேமிலிக்கு கிடைத்த தரமான ஓப்பனிங்.. சசிகுமாரை குஷியாக்கிய முதல் நாள் வசூல்

Tourist Family First Day Collection: இந்த மாதிரி படம் எல்லாம் தொடர்ந்து வரணும் என ஆடியன்ஸை ஏங்க வைக்கின்றன சில படங்கள். மெய்யழகன் லப்பர் பந்து என தொடங்கி இப்போது டூரிஸ்ட் ஃபேமிலி வரை அந்த ஏக்கம் தொடர்கிறது.

அப்படி ஒரு ஃபீல் குட் படமாக தான் டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

புதுமுக இயக்குனர் என்று சொல்ல முடியாத அளவுக்கு திரைகதையை நகர்த்தி சென்றுள்ளார் அபிஷன். கலகலப்பு கண்ணீர் எதார்த்தம் என அனைத்தும் கலந்த கலவையாக படம் இருக்கிறது.

முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்

அதனாலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. நேற்று வெளியான இப்படத்தை பார்த்த ஆடியன்ஸ் பாராட்டி வருகின்றனர்.

தியேட்டர் விசிட் சென்ற சசிகுமாருக்கும் ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இது போல் படங்கள் நிறைய வரவேண்டும் என ரசிகர்களும் அவரிடம் சந்தோசமாக கூறினார்கள்.

நீங்கள் இதேபோல் ஆதரவு கொடுத்தால் தான் அடுத்தடுத்த படங்கள் வரும் என சசிகுமாரும் ஜாலியாக வேண்டுகோள் வைத்தார். இப்படி ரெஸ்பான்ஸ் பெற்று வரும் டூரிஸ்ட் ஃபேமிலி முதல் நாளிலேயே தரமான ஓப்பனிங்கை பெற்றுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 1.5 கோடி வரை வசூலித்துள்ளது. உலக அளவில் பார்க்கும் பொழுது 2.5 கோடியாக இதன் வசூல் இருக்கிறது.

7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இன்னும் சில தினங்களில் போட்ட காசை எடுத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. தொடர் விடுமுறை அடுத்ததாக பெரிய படங்கள் எதுவும் வராத காரணத்தால் நிச்சயம் படத்தின் வசூல் அதிகரிக்கும்.

அது மட்டும் இன்றி சசிகுமார் நடித்த படங்களிலேயே இதுதான் அதிக வசூலை முதல் நாளில் பெற்றுள்ளது. ஆக மொத்தம் டூரிஸ்ட் ஃபேமிலி குடும்ப ஆடியன்ஸை மீண்டும் தியேட்டருக்கு வரவழைத்துள்ளது.