Sasikumar : நேற்று மே 16ஆம் தேதி சூரியின் மாமன் மற்றும் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களால் ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படங்களின் வசூல் பாதிக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் மாமன் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் படங்கள் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. இதனால் முதல் நாளில் ஓரளவு நல்ல வசூலை பெற்றாலும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் முதல் நாளில் 2.85 கோடி வசூல் பெற்றது. சூரியின் மாமன் படம் முதல் நாளில் 1.21 கோடி வசூல் செய்தது. இதை காட்டிலும் மூன்று வாரங்களுக்கு முன்னால் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் மழையில் நனைந்து வருகிறது.
புது வரவால் குறையாத டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வசூல்
உச்ச நடிகராக இருக்கும் சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் டூரிஸ்ட் ஃபேமிலி போட்டி போட்டது. ஆனாலும் திரையரங்குகளில் ரெட்ரோவை காட்டிலும் இந்த படம் வசூலை அள்ளிக் குவித்தது. இதனால் அதிக காட்சிகள் இந்த படத்திற்கு ஒதுக்கப்பட்டது.
மேலும் மூன்று வாரங்களைக் கடந்த நிலையில் கிட்டத்தட்ட 45 கோடியை தாண்டி வசூலை பெற்றிருக்கிறது. நேற்று பதினாறாம் நாள் மட்டும் கிட்டத்தட்ட 1.65 கோடி வசூலை பெற்று இருக்கிறது. மிக விரைவில் இந்த படம் 50 கோடி கிளப்பில் இணைய இருக்கிறது.
சசிகுமாரின் கேரியரில் மிக அதிக வசூல் செய்த படமாக இந்த படம் அமைந்துள்ளது. புது வரவாக வந்த படங்களால் இப்போது சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆகையால் தொடர்ந்து வசூல் வேட்டையில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் உள்ளது.