ட்ரெண்டிங் படம் சொல்லும் கருத்து.. அதிர்ச்சியில் இருக்கும் ட்ரெண்டிங் Couples

Cinema : பொதுவாகவே ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடும் பொழுது, வித்தியாசமான திரைப்படம் என்றால் அது ரசிகர்கள் மத்தியில் ஒரு நேர்மறையான எண்ணத்தை உருவாக்குகிறது. இதே போலவே தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆகிறது.

திரைப்படம் அதிகம் வசூலிக்க வேண்டும் என்பது இயக்குனர்களின் எண்ணம், நம் நடிப்பு பாராட்டப்பட வேண்டும் என்பது நடிகர்களின் எண்ணம் இதெல்லாம் யார் கையில் இருக்கிறது படம் பார்க்க செல்லும் நம் மக்கள் கையில் தான் இருக்கிறது. டிக்கெட் வாங்கும் மக்கள் சும்மாவா இருப்பார்கள் அவர்களுடைய விமர்சனத்தை கண்டிப்பாக முன் வைப்பார்கள்.

புதுவித கண்ணோட்டம்..

மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் பதிந்த நடிகர் கலையரசன். இதைத்தொடர்ந்து பல படங்களில் தனது நடிப்பு திறமையை நிரூபித்தார். தற்போது இவர் நடித்த “ட்ரெண்டிங்” திரைப்படத்தின் விமர்சனம் தான் வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

சுருக்கமான கதை : சமூக வலைத்தளங்ககளில் ட்ரெண்டாக வேண்டும் என்ற ஆசையில், தங்களது ஒட்டுமொத்த வாழ்க்கையை தொலைக்கும் தம்பதிகள். அந்த வலைத்தள மோகத்தில் இருந்து எப்படி மீளுகிறார்கள்? எதை நோக்கி வாழ்க்கையை தொலைக்கிறார்கள்?

சமூகத்திற்கு சொல்லும் கதை இதெல்லாம் வைத்து இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதை களத்துடன் இயக்கி இருக்கிறார் சிவராஜ். இந்த கால கட்டத்தில் பல் இல்லாமல் கூட இருந்து விடுகிறார்கள் ஆனால் செல் இல்லாமல் இல்லை. தங்களை ஃபேமஸ் படுத்திக் கொள்ள வேண்டும் எண்ணத்தில், சிலர் நிம்மதியான வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.

சமூக உணர்வுகளை கொண்ட இத்திரைப்படம், வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் தம்பதிகளுக்கு கூட ஒரு ஷாக் கொடுக்கும் வகையில் கருத்து இருக்கிறதாம். நிச்சயம் இளைய சமுதாயத்தினர் பார்க்க வேண்டிய படம்.