ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். இந்த படம் எதிர்பார்க்காத அளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இப்படம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இப்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.
அவதார் 2 தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்று 160 மொழிகளில் வெளியாகிறது. வருகின்ற டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டனர். அந்த ட்ரெய்லர் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.
அவதார் 2 படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்துக்காக ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் சமயத்தில பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது முதலாவதாக கேரளாவில் அவதார் 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதாவது திரையரங்கு உரிமையாளர்களிடம் விநியோகஸ்தர்கள் அதிக ஷேர் கேட்டு வந்தனர். இதற்கு கேரளா தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது தமிழ்நாட்டிலும் அவதார் படத்திற்கு பிரச்சனை கிளம்பி உள்ளது.
இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்யும் விநியோக நிறுவனம் தியேட்டர் உரிமையாளர்களிடம் அதிக பங்கு தொகை கேட்கிறதாம். ஆகையால் தியேட்டர் உரிமையாளர்கள் இவ்வளவு பணம் கொடுத்து படத்தை வாங்க மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஆகையால் தமிழ் மொழியில் இப்படத்தை இப்போது வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் படம் வெளியாக கிட்டத்தட்ட 13 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் சுமுக பேச்சு வார்த்தை நடைபெற்றால் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அவதார் 2 படம் வெளியாக வாய்ப்புள்ளது.