TVK மதுரை மாநாடு எப்படி இருக்கும்.? ஆளுங்கட்சி இடையூறுகளை தகர்த்தெறிவாரா விஜய்

TVK-Vijay: தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்து முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார் விஜய். விக்ரவாண்டியில் நடந்த அந்த மாநாட்டில் 10 லட்சம் மக்கள் கலந்து கொண்டு தேசிய மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

அதைவிட மாஸாக நடக்க இருக்கிறது இரண்டாவது மாநாடு. மதுரையில் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்த நிகழ்வு நடக்கப் போகிறது. அதற்கான வேலைகள் சில வாரங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது.

மாநாடு நடக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பே திருவிழா போல் கரகாட்டம் ஒயிலாட்டம் என கலை கட்டப் போவதாக ஒரு செய்தியும் இருக்கிறது. அது மட்டும் இன்றி முதல் மாநாட்டிற்கு வந்த மக்களை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக மதுரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுங்கட்சி இடையூறுகளை தகர்த்தெறிவாரா விஜய்

கிட்டத்தட்ட 40 லட்சம் மக்கள் வர வாய்ப்பிருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் பக்காவாக செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் கணிப்பு படி 30 லட்சம் மக்கள் கூடுவார்கள் என தெரிகிறது.

மதுரையை சுற்றியுள்ள ஊர்கள் மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி என எல்லா ஊர்களில் இருந்தும் விஜயின் ரசிகர்களும் கட்சியின் தொண்டர்களும் ஒன்று கூட இருக்கின்றனர். இந்த மாநாட்டில் தான் தளபதியின் செல்வாக்கு எப்படி என மற்ற கட்சிகளுக்கு தெரிய போகிறது.

ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. முதல் மாநாடு நடக்கும் போது ஆளும் கட்சி பல இடையூறுகளை கொடுத்தார்கள். அந்த மாநாடு திருச்சியில் தான் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் தொடர்ந்து வந்த இடையூறுகளால் விக்ரவாண்டியில் நடத்தினார்கள். அதன் காரணமாகவே மக்கள் ஆசை இருந்தாலும் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தனர். அது போல் இந்த முறை இருக்கக் கூடாது என்பதற்காக விஜய் முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.

இதற்கும் தடைகள் வரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதையெல்லாம் தாண்டி அவர் மாநாட்டில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறார். அது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.