இரட்டை வேடங்களில் ஹிட் அடித்த நடிகர்கள்.. டாப் நடிகர்களுக்கும் கை கொடுத்ததா இரட்டை வேடம்

cinema : தமிழ் சினிமாவில் ஹிட்டடித்த படங்கள் நிறைய இருக்கின்றன. அந்த வரிசையில் இரட்டை வேடங்களில் நடிகர்கள் நடித்து இயக்குனர்கள் ஹிட்டடித்த படங்கள் நிறைய இருக்கின்றன.

ஆனால் இவர்கள் எடுத்த அத்தனை படங்களும் ஹிட் கொடுக்கவும் இல்லை, அத்தனை படங்களும் தோல்வியாகவும் இல்லை. இந்த வரிசையில் டாப் நடிகர்கள் அனைத்து பேருமே இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளனர்.

இரட்டை வேடங்களில் ஹிட் அடித்த நடிகர்கள்..

கமல்ஹாசன் : நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஒற்றை வேடம் என்றாலே நடிப்பில் பின்னின் பெடல் எடுப்பார். இவர் இரட்டை வேடங்களில் மிக அருமையாக நடித்திருப்பார். அபூர்வ சகோதரர்கள், இந்தியன் போன்ற படங்களில் இரட்டை வேடங்களில் மிரட்டி இருப்பார். தசாவதாரம் படத்தில் இரட்டை வேடம் அல்ல பல வேடங்களில் தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டி இருப்பார் கமல்ஹாசன்.

விஜய் : நடிகர் விஜய் அவர்களும் ஆக சிறந்த ஒரு நடிகர், இவர் கத்தி, மெர்சல் போன்ற படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து வெற்றி கண்டவர். இந்த இரண்டு படங்களுமே நடிகர் விஜய் அவர்களுக்கு வெற்றி படமாக அமைந்தது.

ரஜினி : நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் எந்திரன் படத்தில் ரோபோவாகவும், விஞ்ஞானியாகவும் இரட்டை வேடத்தில் நடித்து ஹிட் கொடுத்திருப்பார். எந்திரன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும், நினைக்க முடியாத அளவிற்கு வெற்றிப்படமாகவும் இது அமைந்தது.

சூர்யா : நடிகர் சூர்யா அவர்கள் மாஸ் மற்றும் மாற்றான் படங்களில் இரட்டையர்களாக தோன்றியிருப்பார். மாஸ் படத்தில் அப்பா மகன் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துக் கொடுத்திருப்பார். மாற்றான் திரைப்படத்தில் ஒட்டி பிறந்த இரட்டையர்களாக நடித்து நம் மனதை கலங்க வைத்திருப்பார்.

அஜித் : நடிகர் அஜித் அவர்கள் நன்றாகவே நடிக்கக்கூடிய நடிகர். அதிலும் இரட்டை வேடம் என்றால் தன் நடிப்பை பிரித்துக் கொடுத்து நன்றாகவே அத்தனை கதாபாத்திரங்களும் உயிர் கொடுக்கக்கூடிய மனிதர். இவர் வாலி, வரலாறு, வில்லன் போன்ற படங்களில் இரட்டையர்களாக நடித்து அசத்தியிருப்பார்.

இவர்களைப் போல இன்னும் ஏகப்பட்ட நடிகர்கள் இரட்டை விட்டதாக பாத்திரத்தில் நடித்து அந்த படத்தை வெற்றி படமாக மாற்றி உள்ளனர்.