காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த குட் நைட்.. இதோ ட்விட்டர் விமர்சனம்

கடந்த ஆண்டு ஜெய் பீம் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரமுமே மனசை ரணமாக்கிய நிலையில், ராசா கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டனை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. அவ்வாறு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருந்தார்.

இப்போது அவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கிறது குட் நைட். விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் பாலாஜி சக்திவேல், மணிகண்டன், மீதா ரகுநாத் ஆகியோர் நடிப்பில் குட் நைட் படம் இன்று வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க ரசிகர்களை வயிறு சிரிக்க வைக்கும் இப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

குட் நைட் படத்தை ரிவ்யூ ஷோவில் பார்த்தவர்களே பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வந்தனர். அந்த வகையில் குட் நைட் என்ற அற்புதமான திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் குடும்பத்தினருடன் சென்று, அழகாக ஒன்றிணைக்கப்பட்ட கதையில் சிறந்த நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சிகிச்சையின் போது மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட வைத்துள்ளதாக ட்விட் செய்துள்ளார்.

good-night

மேலும் எந்த ஒரு இடத்துலயும் நமட்டு சிரிப்பு சிரிக்காம ரொம்ப நாளைக்கு அப்புறம் மனசு விட்டு சிரிச்சன், அழுதேன் படம் பாக்கும் பொது ஒவ்வொரு சீனும் யாரோ ஒருத்தங்களோட வாழ்க்கையோட கனக்ட் ஆகுற மாதிரி இருக்கும். படம் மிகவும் அற்புதமாக இருப்பதாக கூறி உள்ளார்.

good-night-review

மற்றொரு ரசிகர் மனமார்ந்த பாசிட்டிவ் விமர்சனத்தை படத்திற்கு கொடுத்துள்ளார். குட் நைட் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்க்கும்படி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக ஃபேமிலி என்டர்டைனராக குட் நைட் இருக்கிறது.

good-night

படத்திற்கு நேர்மையான விமர்சனங்கள் மற்றும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வருடம் வெளியான படங்களில் மற்றொரு நல்ல தரமான படமாக குட் நைட் படம் அமைந்திருக்கிறது. இவ்வாறு பலர் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் தொடர்ந்து பாசிட்டிவ் கமெண்டுகள் வருவதால் மக்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

good-night-review