லோகேஷ் படத்தில் நடிக்க மறுத்த 2 டான்ஸ் மாஸ்டர்கள்.. கடைசியில் விஜய் சேதுபதியிடம் தஞ்சம் அடைந்த இயக்குனர்

எந்தப் பக்கம் திரும்பினாலும் லோகேஷ் பெயர் தான் பேசப்பட்டு வருகிறது. அது சினிமா பிரபலங்களாக இருக்கட்டும், ரசிகர்களாக இருக்கட்டும் இவரை அதிகமாக தூக்கி கொண்டாடி வருகிறார்கள். அதற்கு காரணம் இவர் கொடுக்கும் வித்தியாசமான கதையும் விறுவிறுப்பான காட்சிகளும் தான். இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கிற மாதிரி இருக்கிறது.

இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் கொஞ்சமாக இருந்தாலும் அதிக அளவில் பிரபலமாகியவர். இவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் இந்த படங்களை பற்றி சொல்லவே வேண்டாம் அது எந்த மாதிரியான படங்கள் என்று அனைவரும் அறிந்ததே. அதில் கடந்த வருடம் வெளிவந்த விக்ரம் படம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த படமாக ஆனது.

அதில் நடித்த பல பிரபலங்களுக்கும் சமமாக பாராட்டு கிடைத்தது. அதிலும் முக்கியமாக அதில் நடித்த சந்தானம் கேரக்டரில் விஜய் சேதுபதி நெகட்டிவ் ரோலில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். ஆனால் இந்த கேரக்டருக்கு முதலில் லோகேஷ் இவரை தேர்ந்தெடுக்கவில்லை. ஏனென்றால் மாஸ்டர் படத்திலும் இவர் வில்லனாக இருந்ததால் ஒரே மாதிரியான உணர்வை கொடுக்கும் என்பதால் விஜய் சேதுபதியை ஓரங்கட்டி விட்டார்.

அதற்கு பதிலாக லோகேஷ்க்கு முதலில் ஞாபகம் வந்தது யார் என்றால் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தான். இவர் இந்த கேரக்டரில் நடித்தால் நன்றாக பொருந்தும் என்று நினைத்து அவரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் அப்பொழுது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. ஆனால் தற்போது லோகேஷ் உடன் வேற ஒரு கூட்டணியில் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார். இது லியோ படமாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது.

அதன்பின் இந்த கேரக்டருக்கு யோசித்தது பிரபு தேவா மாஸ்டரை. ஆனால் அவரும் அந்த நேரத்தில் ஹீரோவாக பல படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டியதால் இந்த நெகட்டிவ் ரோலில் நடித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு குழப்பத்தில் இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார். அத்துடன் இதனால் தன்னுடைய இமேஜ் கொஞ்சம் டேமேஜ் ஆக கூட வாய்ப்பு இருக்கிறது என்ற பயத்தால் மறுத்துவிட்டார்.

அதன்பின் லோகேஷ்க்கு வேறு வழியே இல்லாமல் கடைசியாக விஜய் சேதுபதியிடமே தஞ்சம் அடைந்து விட்டார். இதை விஜய் சேதுபதியே ஒரு மேடையில் கூறி இருப்பார். அதாவது லோகேஷ் நீ யாரு கிட்ட எப்படி போய் நின்னாலும் கடைசியில் என்கிட்ட தான் வந்து நிற்பாய். அதே மாதிரியே என்கிட்ட வந்து சந்தானம் கேரக்டருக்கு நின்றார். ஆனாலும் இந்த சந்தானம் கேரக்டருக்கு இவரை தவிர வேறு யாராலும் கச்சிதமாக நடித்திருக்க முடியாது.