Vikram : கமல், விக்ரம் போன்ற நடிகர்கள் சினிமாவுக்காக பல அர்ப்பணிப்பு செய்தாலும் அவர்கள் படங்கள் பெரிய வெற்றி பெறுவது என்றால் சொற்பம் தான். அந்த வகையில் விக்ரம் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.
இதில் தங்கலான் மற்றும் வீரதீர சூரன் படங்கள் விக்ரமை காப்பாற்றியது. இப்போது கதை தேர்வில் விக்ரம் மிகுந்த முக்கியத்துவம் காட்டி வருகிறார். அந்த வகையில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக ஒப்பந்தமானார்.
ஆனால் கதையில் மாற்றத்தை விக்ரம் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். மடோன் அஸ்வின் ஏதேதோ மாற்றங்கள் செய்தாலும் விக்ரமுக்கு கதையில் ஈர்ப்பு வரவில்லையாம். ஆகையால் இந்த படத்தில் இருந்து விக்ரம் விலகி விட்டாராம்.
விக்ரம் ரிஜெக்ட் செய்த இரண்டு படங்கள்
ஏற்கனவே மடோன் அஸ்வின் மண்டேலா, மாவீரன் என்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அடுத்ததாக ஐசரி கணேஷ் பகத் பாசிலுக்கு கதை எழுதிய ஒரு இயக்குனரிடம் விக்ரமுகாக அந்த கதையை தயார் செய்ய சொல்லி இருக்கிறார்.
அவரும் மாற்றங்கள் செய்து விக்ரமிடம் கூறியிருக்கிறார். ஆனால் அந்த கதையும் விக்ரமுக்கு பிடிக்காததால் ரிஜெக்ட் செய்து விட்டாராம். இப்படி தன்னை தேடி வந்த இரண்டு கதைகளையும் விக்ரம் வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்து விட்டார்.
மேலும் பல இயக்குனர்களிடம் கதையையும் கேட்டு வருகிறாராம். விரைவில் ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து இயக்குனரை அறிவிப்பார் என்ற எதிர்பார்க்கலாம். இப்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரம் மாரி செல்வராஜின் பைசன் படத்தில் நடித்திருக்கிறார்.