32 வருடங்களுக்குப் பின் இணையும் ரெண்டு சூப்பர் ஸ்டார்கள்.. தலைவர் பட அடுத்த வில்லனை உறுதி செய்த படக்குழு

Rajini 170: ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்திற்குப் பிறகு, இனி இவருடைய ஆட்டம் அவ்வளவுதான். படங்கள் இந்த அளவிற்கு தான் ஓடும் என்று பலரும் கடுமையான விமர்சனங்களை கொடுத்தார்கள். ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறியும் விதமாக தற்போது வெளியாகி உள்ள ஜெயிலர் படம் அனைவரது வாயையும் அடைத்துவிட்டது. அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லா பக்கமும் வெற்றி பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து இவருடைய அடுத்த 170 ஆவது படத்தை டீஜெ ஞானவேல் இயக்கத்தில் கமிட்டாய் இருக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போகிறது. அத்துடன் வழக்கம்போல் ரஜினி படம் என்றாலே அனிருத் இல்லாமல் எப்படி, அதனால் இப்படத்திலும் அனிருத் பட்டையை கிளப்ப போகிறார்.

அடுத்ததாக ஒரு படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்றால் அதற்கு முக்கியமான வில்லினை தேர்வு செய்தாக வேண்டும். அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங் ஆக இருக்கும் வில்லனை படக்குழு லாக் செய்து விட்டது. வேற யாரும் இல்லை மாமன்னன் படத்தில் வில்லனாக மிரட்டிய பகத் பாசில் தான்.

அதுவும் ரஜினிக்கு எதிராக பக்கா மாஸ் ஆக பகத் பாஸில் கதாபாத்திரம் அமையப் போகிறது. ஆனால் முதலில் இந்த கேரக்டருக்கு விக்ரமை தான் நடிப்பதற்கு கேட்டிருந்தார்கள். ஆனால் அதற்கு விக்ரமிடமிருந்து எந்தவித பதிலும் சரியாக வரவில்லை என்பதால் பகத் பாசிலை கமிட் செய்து விட்டார்கள்.

அடுத்ததாக இப்படத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டும் இல்லை இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணையப் போகிறார்கள். 32 வருடங்களுக்கு முன் ரஜினியும் அமிதாப்பச்சனும் ஒன்றாக நடித்தார்கள். அதற்கு அடுத்து தற்போது இந்த படத்தின் மூலம் இவர்கள் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள். ஆக மொத்தத்தில் இப்படம் சூப்பர் ஸ்டார்களை வைத்து களைகட்ட போகிறது.

மேலும் இதில் ரஜினியின் கேரக்டர் போலீஸ் ஆபீஸராக இருக்கப் போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இமயமலை சென்று திரும்பி வந்த ரஜினி அடுத்த கட்ட வேலையாக இப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி விட்டார். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு மற்றும் அனைத்து வேலைகளும் கூடிய விரைவில் நடக்க இருக்கிறது. ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிக்கு இன்னும் ஏறுமுகமாக தான் இருக்கப் போகிறது.