வெற்றிமாறன் கதையில் செட்டே ஆகாத 2 டபுள் ஹீரோக்கள்.. பேசியே சோலியை முடிக்கும் விஜய் சேதுபதி

வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது இறைவன் மிகப் பெரியவன், மனுசி போன்ற படங்களை தயாரித்தும் வருகிறார். இவரை தனுஷ் அடிக்கடி சந்தித்து வருகிறார் அதனால் அடுத்த ப்ராஜெக்ட் இருவரும் இணைய விருப்பதாக செய்திகள் அடிபடுகிறது.

இதற்கிடையில் இயக்குனர்கள் பல பேர் வெற்றிமாறனிடம் இயக்குவதற்காக, கதை ஏதாவது இருந்தால் வேண்டும் என கேட்டு வருகிறார்கள். அப்படி இவரிடம் வாங்கிய கதையை தான் துரை செந்தில்குமார் இப்பொழுது இயக்க உள்ளார்.

பல மாதங்களுக்கு முன்பு வெற்றிமாறன் கதை திரைக்கதை எழுத லாரன்ஸ் அதில் நடிப்பதாக இருந்தது. இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கப் போவதாக அப்பொழுது பேச்சு வார்த்தைகள் அடிபட்டது. ஆனால் அந்த காலகட்டத்தில் அது வெறும் பேச்சாகவே போய்விட்டது.

இப்பொழுது அந்தப் படத்தை டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக மாற்றி. சில பல பட்டி, டிங்கரியின் வேலை பார்த்து மீண்டும் இயக்க உள்ளார் துரை செந்தில்குமார். இந்த படத்திற்காக இரண்டு ஹீரோக்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் இருவரும் நடிக்க உள்ளனர். இப்படி வித்தியாசமான காம்பினேஷனாக இருப்பதால் இதற்கு எதிர்பார்ப்பு பெருகி வருகிறது.

அதிகாரம் என்ற பெயரில் இந்த படம் உருவாக போகிறது. இரண்டு பேருமே பக்கம் பக்கமாக வசனங்களை பேசக்கூடியவர்கள். அதனால் இந்த கதையில் இருவரும் பல மெசேஜ்கள் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் விஜய் சேதுபதி பேச ஆரம்பித்து விட்டால் மொத்த சோலியும் முடிந்து விடும்.