உதயநிதிக்கு லியோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. விஜய்க்கு வந்த நெருக்கடிக்கு இதான் காரணம்

Leo Movie: லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக லியோ படத்தில் தரமான சம்பவத்தை செய்துள்ளனர். விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. எப்போதுமே விஜய் படம் ரிலீசாக போகிறது என்றால் அதற்கு முன்பு பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடத்தப்படும். இந்த முறை வெளிநாடுகளில் எல்லாம் நடக்க போகிறது என ஆகா ஓகோன்னு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற விட்டனர்.

ஆனால் கடைசியில் லியோ படத்தின் தயாரிப்பாளரான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார், செப்டம்பர் 30ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆடியோ லான்ச் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அரசியல் அழுத்தத்தால் தான் விஜய் லியோ ஆடியோ லாஞ்சை கேன்சல் செய்தார் என்றும் கிளப்பி விட்டனர்.

இதற்கு நிச்சயம் உதயநிதி ஸ்டாலின் பின்புலத்திலிருந்து நிறைய வேலையை பார்த்திருப்பார் என்றும் அவர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. ஏனென்றால் சமீப காலமாகவே விஜய்க்கும் உதயநிதிக்கும் ஆகாமல் போகிறது. அவர் அரசியலுக்கு வர போகிறார் என்பதும் அது தீவிரமடைந்ததாகவும் குத்தி விடுகின்றனர்.

ஆனால் உண்மையில் உதயநிதிக்கும் லியோ படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மொத்தமும் லியோ டீம் சொதப்பியதுதான் காரணம். அவர்கள் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதற்குரிய எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக செய்ததுதான் எல்லாத்திற்கும் வினையாய் முடிந்தது.

ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு வருகை தரும் மக்களுக்கு எந்தவித பாதுகாப்பையும் முன்கூட்டியே லியோ பட குழு ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் இசை வெளியீட்டு விழாவிற்கான மேடை அமைப்பதையும் மற்ற ஏற்பாடுகளையும் செய்வதைக்கூட அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு எந்த தகவலையும் அளிக்கவில்லை

பொதுவாக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார்கள் என்றால், அதை காவல்துறையின் அறிவுறுத்தலின்படி செய்தால் மட்டுமே அந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு அவர்கள் அனுமதி தருவார்கள். இதற்காக முதலில் காவல் துறையிடம் லியோ படக்குழு அனுமதி பெற்று இருக்க வேண்டும்.

ஆனால் அதை எதையுமே லியோ டீம் செய்யவில்லை, கடைசி நேரத்தில் அவசர அவசரமாக நெருக்கு வேட்டில் காவல்துறையை நாடியதுதான் லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆகுவதற்கு முழு காரணமும். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல் கடைசி நேரத்தில் காவல் துறையை அணுகினார்கள். ஆனால் அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை, நிகழ்ச்சியும் ரத்தானது.