Director Mariselvaraj: ஒரே கொள்கையை பின்பற்றி படம் இயக்கி வெற்றி கண்டுவரும் இயக்குனர் தான் மாரி செல்வராஜ். இந்நிலையில் படம் வெளியாகி தியேட்டரிலேயே வசூல் சாதனை கண்டு, ஓ டி டி இல் வெளிவந்துள்ள படம் குறித்த தகவல்களை இங்கு காண்போம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வெளிவந்த படம் தான் மாமன்னன். பல சர்ச்சைகளை உள்ளடக்கி இவர் மேற்கொண்ட இப்படம் ஓரளவு வெற்றியை பெற்று தந்தது.
இருப்பினும் இவரின் ஒவ்வொரு படங்களும் வாக்குவாத சோதனைகளை சந்தித்து தான் வருகிறது. அவ்வாறு ஜூன் மாதம் 29ஆம் தேதி ரிலீசான இப்படம் ஓரளவு விமர்சனங்களை பெற்று தந்து, அதன்பின் ஓடிடி உரிமம் பெற்று ஹெச்டி பிரிண்டில் வெளியாகி உள்ளது.
மேலும் இப்படத்திற்கு நிகராய் புதுமுக இயக்குனரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் மாறுபட்ட கதை அம்சத்தோடு வெளிவந்த படம் தான் போர் தொழில். புலனாய்வு செய்யும் கதாபாத்திரத்தில் சரத்குமார் தன் உன்னத நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார்.
மேலும் 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனையை படைத்துள்ளது. இருப்பினும் இப்படம் இப்பொழுதுதான் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னரே தியேட்டர்களிலேயே நல்ல வசூல் வேட்டை கண்டு ருத்ரதாண்டம் ஆடி வருகிறது.
மேலும் மக்களின் விமர்சனங்களை பெற்று வரும், இப்படத்திற்கு முன்பு மாமன்னன் படம் எல்லாம் ஒன்றுமே இல்லை. மாரி செல்வராஜின் தற்பெருமைக்கு பதிலடி கொடுக்கும் விதமாய் விக்னேஷ் ராஜாவின் படைப்பு பேசப்பட்டு, வசூலில் சாதனை கண்டு வருகிறது.