அஸ்தமனமாகும் உதயம் தியேட்டர்.. சென்னையின் அடையாளத்தை மூட இப்படி ஒரு காரணமா.?

Udhayam Theatre : உதயம் தியேட்டர்ல என் இதயத்தை தொலைச்சேன் என்ற பாடல் வரிகள் தொடங்கி சென்னையில் அடையாளமாக கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக இருந்த வந்தது உதயம் தியேட்டர். இப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் உதயம் தியேட்டர் மூடப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களை பார்க்கலாம்.

அதாவது உதயம் தியேட்டர் பல காலமாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் அதிகம் வந்த காரணத்தினால் ரசிகர்கள் பெரிதும் அங்கு சென்று படம் பார்க்க தான் விரும்புகிறார்கள். இதனால் இது போன்ற பழைய திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைய தொடங்குகிறது.

மற்றொருபுறம் ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கம் இப்போது அதிகமாக இருக்கிறது. பெரும்பாலான படங்கள் ஓடிடியிலேயே வெளியாகி விடுகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. அப்போது உள்ள காலகட்டத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக தியேட்டரில் ஓடிய படங்களும் உண்டு.

ஆனால் இப்போது ஓடிடியில் படங்கள் வெளியாவதால் தியேட்டரின் வசூல் குறைகிறது. இதன் காரணமாக தியேட்டர் உரிமையாளர்கள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருவதால் பல திரையரங்குகள் தற்போது மூடப்பட்டு வருகிறது. அதேபோல் தான் சாந்தி தியேட்டரும் மூடப்பட்டு இருந்தது.

இப்போது அதே போல் அசோக் பில்லர் அருகே உள்ள உதயம் தியேட்டர் இருந்த இடத்தை காசாகிராண்ட் வாங்கியுள்ளது. இந்த இடத்தில் மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றை கட்ட முடிவு செய்துள்ளனர். ஆகையால் உதயம் தியேட்டர் இப்போது அஸ்தமனமாகி உள்ளது.