Vijay-Udhayanidhi: அரசியல் பிரபலங்களைப் பற்றி எந்த ஒளிவு, மறைவு இல்லாமல் துணிச்சலான விஷயங்களை சொல்லக்கூடியவர் தான் சவுக்கு சங்கர். அதுவும் குறிப்பாக திமுகவை பற்றி தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி மற்றும் லியோ படத்தை பற்றி பேசி இருந்தார்.
அதாவது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்காது என்று சவுக்கு சங்கர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இப்போது தமிழ் சினிமாவில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் ஓங்கி நிற்கிறது. அவர்கள் நினைத்தால் தான் படத்தை வெளியிட முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த சூழலில் வாரிசு படத்தை லலித் வெளியிட்ட நிலையில் சென்னையில் முக்கிய இடங்களில் மட்டும் உதயநிதி வெளியிட்டார். அதேபோல் இப்போது லியோ படத்தை சென்னை, தெற்கு ஆற்காடு, வடக்கு ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கேட்டிருக்கிறது.
இதற்கு விஜய் அனுமதித்தால் மட்டுமே லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை நடத்த அனுமதிப்போம் என்ற உதயநிதி தரப்பிலிருந்து கூறப்பட்டதாக சவுக்கு சங்கர் கூறியிருந்தார். மேலும் விஜய் இதில் உறுதியாக இருப்பதால் நிச்சயம் ஆடியோ லான்ச் நடக்க வாய்ப்பு இருக்காது என்று ஆணித்தரமாக அடித்து சொல்லி இருந்தார்.
இப்போது சவுக்கு சங்கர் சொன்னது போல் தயாரிப்பு தரப்பில் இருந்து லியோ ஆடியோ லான்ச் நடக்காது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆனால் இதற்குப் பின்னால் அரசியல் காரணம் எதுவும் இல்லை என பதிவிட்டு இருக்கிறார்கள். அந்த பதிவை சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் ஆடியோ லான்ச் நடக்காததற்கான காரணம் வெளிப்படையாக தெரிந்துள்ளது. நாங்கள் முட்டாள் என்று நினைக்கிறீர்களா என சவுக்கு சங்கர் பதிவிட்டிருக்கிறார். மேலும் உதயநிதியால் தான் இப்போது விஜய் படத்தின் ஆடியோ லான்ச் தடைபட்டது என்று முன்கூட்டியே சவுக்கு சங்கர் சொல்லி உள்ளதால் ரசிகர்களுக்கு இது உண்மையாக இருக்குமோ என யோசிக்கும் படியாக அமைந்துள்ளது.
