Maamannan Movie Collection: தற்போது அரசியல் பதவியில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் முழு நேர அரசியல்வாதியாக இருக்க விரும்புகிறார். இதனால் கடைசியாக ஒரு அழுத்தமான வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசி கடைசியாக மாமன்னன் படத்தில் வடிவேலு உடன் இணைந்து நடித்து கடந்த ஜூன் 29ஆம் தேதி ரிலீஸ் செய்தார்.
பழங்காலமாகவே மனிதர்களிடம் ஊறிக் கிடந்த சாதி வேறுபாட்டை இந்த படத்தில் வெளிப்படையாக பேசி, சமூக மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே மாமன்னன் வசூலை பார்த்த பிறகு தலைகால் புரியாமல் ஆடுகிற உதயநிதி, மறுபடியும் படம் நடிக்கலாம் என தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்வாரோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அந்த அளவிற்கு இந்த படம் தற்போது வரை 40 கோடியை அசால்ட் ஆக வசூலித்து இருக்கிறது.
ஏற்கனவே நிறைய படங்களை தயாரித்து விநியோகம் செய்த உதயநிதிக்கு தன்னுடைய கடைசி படத்தின் வசூல் சரித்திர சாதனையாக இருக்க வேண்டும் என அந்த படத்துடன் வேறு எந்த படத்தையும் ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினார். அதுமட்டுமல்ல மாமன்னன் படத்திற்காக நிறைய கிளீனிங் போட வேண்டும் என திரையரங்குகளுக்கு உத்தரவிட்டார்.
எந்தெந்த வகையில் எல்லாம் மாமன்னனின் வசூலை உயர்த்த முடியும் என உதயநிதி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார்.இதனால் இந்த படத்தின் அடுத்தடுத்த நாள் வசூல் ஏறுமுகத்தில் இருக்கிறதே தவிர சோடைப் போகவில்லை. எனவே இன்னும் ஒரு சில தினத்தில் 50 கோடியை மாமன்னன் தொட்டுவிடும்.
மாமன்னன் கொடுக்கும் வெற்றியை பார்த்துவிட்டு உதயநிதி மீண்டும் படங்களில் தொடர்ந்து நடிக்கலாம் என்ற முடிவுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த படத்தில் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து படக்குழுவை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைக்கிறது.