அருண் விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்த உதயநிதி.. நல்லவேளை நடிக்கல சாமி, இயக்குனர் காணாம போய்ருப்பாரு

உதயநிதி ஸ்டாலின் சில வருடங்களாக நடிப்பதை காட்டிலும் தயாரிப்பு மற்றும் படத்தை விநியோகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதுமட்டுமன்றி அரசியலிலும் பதவியில் உள்ளதால் இன்னும் இரண்டு மூன்று படங்களோடு சினிமாவை விட்டு முழுவதுமாக உதயநிதி விலக உள்ளார்.

இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு பிறகு உதயநிதியின் கலகத் தலைவன் படம் இன்று வெளியாகி உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆரவ், கலையரசு, நிதி அகர்வால் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் அருண் விஜய்யின் தடம் படத்தில் முதலில் உதயநிதி தான் நடிக்க வேண்டியதாம். முதலில் இயக்குனர் மகிழ்திருமேனி உதயநிதியை அணுகி கதையை கூறியுள்ளார். அந்தக் கதை உதயநிதிக்கு மிகவும் பிடித்த போய் உள்ளது. மேலும் இதற்காக ஒன்றரை வருடம் மகிழ்திருமேனி காத்திருந்துள்ளார்.

அதன் பின்பு சில காரணங்களினால் தடம் படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததாம். ஒரு கட்டத்திற்கு மேல் அருண் விஜய் தடம் படத்தை நான் பண்ணுகிறேன் என்று உதயநிதிக்கு ஃபோன் செய்து கேட்டுள்ளார். கொடுக்க மனமில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் அருண் விஜய்க்கு இந்த படத்தை உதயநிதி கொடுத்தாராம்.

அப்போதே படம் சூப்பர் ஹிட் தான் என்று உதயநிதி சொல்லி உள்ளார். மேலும் தடம் படத்தில் எழில் கதாபாத்திரத்திற்கு அருண் விஜய் பக்காவாக பொருந்தி இருந்தார். மேலும் இந்த படத்தில் அவர் அசுர நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அருண் விஜயின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக தடம் படம் அமைந்துள்ளது.

ஆகையால் தான் மகிழ்த்திருமேனி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சியம் ஆனார். ஒருவேளை தடம் படத்தில் உதயநிதியே நடித்திருந்தால் படமும் சொதப்பி இருக்கும், மகிழ்திருமேனி தமிழ் சினிமாவில் காணாமல் போயிருப்பார் என சில ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.