மறைமுகமாக காய் நகர்த்திய உதயநிதி.. தளபதி 67 படத்திற்கு பின் அஸ்தான இயக்குனருடன் இணையும் விஜய்

வாரிசு படத்திற்கு பிறகு விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தின் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக அட்லியுடன் படம் பண்ண போவது உறுதி. ஆனால் இப்போது அந்த படத்திற்கு யார் தயாரிப்பாளர்கள் என்ற பிரச்சனை துவங்கியது.

இதற்கு முன் தெறி, மெர்சல், பிகில் போன்ற விஜய்யின் மூன்று படங்களையும் அட்லி இயக்கினார். தற்போது தளபதி 68 படத்தையும் அவர்தான் இயக்கப் போகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது தேனாண்டால் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க அட்லியிடம் பேசி வருகிறது.

ஒத்துக் கொள்ளவில்லை என்றால் மெர்சல் ஏற்பட்ட நஷ்டத்தை சொல்லி இந்த படத்தை எப்படியாவது பண்ண வேண்டும் என்று நினைப்பில் இருக்கிறார்கள் தேனாண்டாள் பிலிம்ஸ். இவ்ளோ பெரிய படத்தை பண்ண இவர்களுக்கு பண உதவி செய்வது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

இனிமேல் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் அனைத்து படங்களுக்கும் பின்னால் இருந்து உதவுவது ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஜய் உடன் தனக்கு மனஸ்தாபம் இருப்பதாக சமீபத்திய பேட்டில் உதயநிதி தெரிவித்ததை தொடர்ந்து தற்போது அரசியலிலும் பிசினஸிலும் அதிக கவனம் செலுத்துகிறார்.

உதயநிதி ஒரு தயாரிப்பாளராக விஜய்யை வைத்து குருவி படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் அவர்களின் தேதிக்காக நீண்ட நாட்களாக காத்திருந்து அந்தப் படத்தை தயாரித்தார். இந்த அளவு இருவரும் பரஸ்பரம் நட்புடனே இருந்தனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் உதயநிதி அவர்கள் சில வருடங்களாக ஒரு சில காரணங்களால் விஜய் அவர்களிடம் பேசுவதில்லை எனக் கூறினார்.

அதனால் விஜய்யுடன் பரஸ்பர உறவை ஏற்படுத்த உதயநிதி மறைமுகமாக காய் நகர்த்துகிறார். விஜய்காக தான் அட்லி இயக்கும் தளபதி 68 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கப் போகிறது. இதனால் பெரும் பொருட்ச அளவில் உருவாக காத்திருக்கும் இந்த படத்தை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.