சிவகார்த்திகேயனை வைத்து விஜய்யை சுத்து போடும் உதயநிதி.. புறநானூறுக்கு பின்னால் உள்ள பாலிடிக்ஸ்

புறநானூறு படம் சூர்யா விலகிய பின் இப்பொழுது சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தின் பெயரை மற்றும் மாற்றுகிறார்கள் ஆனால் கதை ஒன்றுதான்.சுதா கொங்காரா இயக்கம் இந்தப் படம் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிரானது என்பதால், பிரச்சனை வரும் என்று சூர்யா இதிலிருந்து விலகி விட்டார்.

டிசம்பர் மாதம் சிவகார்த்திகேயன் புறநானூறு பட சூட்டிங்கில் கலந்து கொள்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு ரிலீஸ் ஆக உள்ளது. இதனிடையே தனது கடைசி படத்தில் நடிக்கும் தளபதி விஜய் புறநானூறு படம் போல் தேர்தலுக்கு முன்னதாக அந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டம் போட்டு வருகிறார்.

தளபதி 69 படம் விஜய்யின் அரசியல் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தேர்தலுக்கு முன்பு இந்த படத்தை வெளியிட்டால் நல்ல ஒரு பாசிடிவ் ரெஸ்பான்ஸ் இருக்கும் என்பதால் விஜய் தனது கடைசி படத்தை அந்த நேரத்தில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

அதேபோல் புறநானூறு படமும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான படம் என்பதால் ஆளுங்கட்சி ஆகிய திமுகவிற்கு நல்ல ஒரு பூஸ்ட்டாக இருக்கும். அதனால் உதயநிதி இந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்வார் என்பது உறுதியாகியுள்ளது இப்பொழுது தளபதி 69 படத்துக்கு எதிராக புறநானூறு படம் அரசியல் ரீதியாக போட்டி கொடுக்கும் என்பது உறுதியாகிவிட்டது.

ஏற்கனவே சினிமாவில் விஜய்யின் இடத்தை சிவ கார்த்திகேயன் தான் நிரப்புவார் என அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க இப்பொழுது உதயநிதி, சிவகார்த்திகேயனின் புறநானூறு படத்தை வைத்து விஜய்க்கு ஆட்டம் காட்ட ஸ்கெட்ச் போட்டு வருகிறார். இந்த இரண்டு படமும் 2025 ஆம் வருடம் அக்டோபர் மாதம் தேர்தலுக்கு முன் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment