இந்தியளவில் பல கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருபவர் தான் பிரசாந்த் கிஷோர். இவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுப்பதற்கு போட்டி தான் நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஷாருக்கானின் ரெட் சில்லி தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே இவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் உதயநிதி தயாரிப்பு நிறுவனமான ரெட்சைன்ட் மூவீஸ் தற்போது இவரின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
இதற்கு பிரசாந்த் கிஷோரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க வைக்கலாம் என்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் முக்கியமாக திமுகவின் வெற்றியை தீர்மானித்தது பிரசாந்த் கிஷோர் பங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் அரசியல் சாணக்கியன் என்று அழைக்கப்படுகிறார். அரசியல்வாதிகளின் வெற்றியை முடிவு செய்வதன் மூலம் அவர் வாழ்க்கையை பெரும் பணம் சம்பாதித்தவர் என்றே கூறலாம்.
தேர்தல் முடிந்த பின் கூட எப்படி மக்களை கவர வேண்டும் என்பதற்கான முழு திட்டத்தை போடுவதில் அவர் ஸ்பெஷலிஸ்ட் என்றே கூறலாம்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதுக்கு பிரசாந்த் கிஷோருக்கு ஒரு முக்கியமான பங்கு இந்தியளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.