Actor Udhayanidhi Stalin: தற்போது முழு நேர அரசியலில் இறங்கிவிட்ட உதயநிதி ஸ்டாலின், கடைசி கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷுடன் மாமன்னன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வரும் ஜூன் 29ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அட்வான்ஸை வாங்கிக் கொண்டு தனக்கு டேக்கா கொடுத்தது மட்டுமல்லாமல் ஹிட் பட வாய்ப்பையும் இழந்துவிட்டதாகவும், அஜித் பட இயக்குனரின் முகத்திரையை கிழித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழ் சினிமாவிற்கு தடையறத் தாக்க, மிகாமன், தடம் போன்ற நல்ல நல்ல படங்களை கொடுத்ததன் மூலம் இப்போது மகிழ்திருமேனிக்கு அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இவர் தடம் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்யின் படத்தை இயக்குவதாக இருந்தது. தடம் படத்தில் முதலில் உதயநிதி தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் கால்சீட் பிரச்சினையின் காரணமாக அந்த படம் அருண் விஜய்க்கு கிடைத்துவிட்டது. இருப்பினும் தடம் படத்திற்கு பிறகு உதயநிதி மகிழ்திருமேனியுடன் இணைய வேண்டும் என அடுத்த படத்திற்காக அட்வான்ஸை கொடுத்து விட்டார்.
அந்த சமயத்தில் விஜய்யும் மகிழ்திருமேனியிடம் கதை கேட்டு ஓகே சொல்லி இருக்கிறார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் உதயநிதியிடம் மகிழ்திருமேனி சென்று, ‘விஜய்யின் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அந்த படத்தை முடித்துவிட்டு உங்களுடைய படத்தை எடுக்கிறேன்’ என கேட்டிருக்கிறாரார்.
ஆனால் உதயநிதி, ‘முதலில் என்னுடைய படத்தை முடித்துவிட்டு பிறகு விஜய்யின் படத்திற்கு செல்லலாம்’ என்று ஸ்டிட்டாக சொல்லிவிட்டாராம். அதன் பிறகு தான் உதயநிதி- மகிழ்திருமேனி காம்போவில் கலகத்தலைவன் படம் வெளியானது. ஒருவேளை உதயநிதி ஸ்டாலின் மகிழ்திருமேனியை விட்டிருந்தால், இந்தக் கலகத்தலைவன் என்ற மொக்க படத்திற்கு பதிலாக விஜய்யை வைத்து நல்ல ஒரு படத்தை மகிழ் கொடுத்திருப்பார்.
தேடிவந்த விஜய் பட வாய்ப்பை தவறவிட்டாலும் தற்போது ஜாக்பாட் அடித்தது போல், அஜித்தின் விடாமுயற்சி படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படம் நிச்சயம் அஜித்துக்கு மட்டுமல்ல மகிழ்திருமேனிக்கும் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.